பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 தமிழ்க் காப்பியங்கள்

சாந்தம் ஒழிந்த எட்டுச் சுவைகள் சொல்லப்படுகின்றன. சாந்தம் புறத்தார்க்குப் புலவை தன்ருதலின் அதனை அவர் விலக்கினர். - -

பேராசிரியர் உருத்திரத்தை யொழித்து ஏனைய எட் டைச் சொல்வதற்கு அவர் காட்டும் சூத்திரம் எந் நூலில் உள்ளதோ தெரியவில்லை. உருத்திரம் ஒழிந்த எட்டும் நாடகத்துக்குரியன என்றதொரு கொள்கை முற் காலத்தில் நிலவியது போலும்.

நாடகத் தமிழ் நூல் செய்த செயிற்றியரைது சூத்திர மாகிய, -

'அறமுதல் நான்கும் ஒன்பான் சுவையும்

உறைமுன் டைக முன்னே குைம்’ என்பதனுல், அவர் ஒன்பது சுவையையும் கொண்டா ரென்று தெரிய வருகின்றது.

மேலே கூறிய எட்டுச் சுவையுள் ஒவ்வொன்றும் சுவைக்கப்படும் பொருள், அதனை நுகர்ந்த பொறி யுணர்வு, அது மனத்துப்பட்ட வழி உள்ளத்து நிகழும் குறிப்பு, குறிப்புக்கள் பிறந்த உள்ளத்தால் உடம்பின் கண் வரும் சத்துவம் என நான்கு வகைப்பட்டு முப்பத்தி ரண்டாதலும், இவை முறையே முன்னிரண்டும் ஒன்ரு கவும், பின்னிரண்டும் ஒன்ருகவும் தொக்கு இரண்டு இரண்டாகிப் பதிருைதலும் காண்க. இவ்விரண்டென் னும் பகுப்பிற்கு, - -

'இழிவகை நிலத்தின் இயல்வது சுவையே”

என்னும் ஒரு சூத்திரம் ஆதாரமாகக் காட்டப்படுகிறது. இது பிற்காலத்து நாடக நூல் செய்த ஆசிரியர் இயற்றிய தென்பர் பேராசிரியர். செயிற்றியனுர் சுவைப் பொருளை யும் சுவையுணர்வையும் ஒன்ருக்கி, சுவைக் குறிப்பு, சத்துவம் என்பவற்றையும் கூட்டி மும்மூன்ருக்குவர்.