பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 - தமிழ்க் காப்பியங்கள்

இவற்றுள் ஸ்தாயி பாவம் என்பது சுவை பிறக்குமள வும் நிலையாய் நிற்பது. சிருங்காரத்திற்குக் காதலும் ரெளத் திரத்திற்குக் கோபமும் போல அமைவன ஸ்தாயி பாவங் களாகும். இவற்றையே தொல்காப்பியர் நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை என்பர். தலைவன் தலைவியரது வடிவம், இளமை முதலியன விபாவம் ஆகும். இவை சுவை தோன்றற்குக் காணங்கள்.அவற்றின் காரியம் அநுபவம், அவற்றிற்குத் துணை செய்வன சஞ்சாரி பாவ மென்பன. இவற்றையே வியபிசாரி பாவ மெனலும் ஆம். அவை அரசனைப் பின் தொடரும் ஏவலர் போலவும் கடலிற் பிறக்கும் அலைகள் போலவும் ஸ்தாயீ பாவங்களைப் புலப்படுத்தி நிற்கும்.' அவை முப்பத்து மூன்றென்பர். தொல்காப்பியத்திற் கூறப்பட்ட உடைமை முதலியன வியபிசாரி பாவங்களே யாகும். .

இவற்றைத் தொகுத்துத் தண்டியலங்கார ஸாரம் இயற்றியவர் பின்வருமாறு கூறுவர் :

விபாவங்களால் தோன்றிஅநுபவங்களால்வெளிப் பட்டுச்சஞ்சாரி பாவங்களால் புஷ்டியடைந்துநிற்கும் ஸ்தாயி பாவம் சுவை யென்னப்படும். இதனை வட நூலார் ரஸம் என்ப. இவை சிங்காரம், ஆசியம், கருனை, ரவுத்திரம், வீரம், பயானகம், குச்சை, அற் புதம், சாந்தம் என ஒன்பதாம். இவற்றிற்கு முற் கூறிய உவகை முதலிய ஒன்பதுமே முறையாய் அடி யென அறிக. இவை நாட்டியத்திலும் காப்பியத் திலும் செய்திறத்தினுைம் சொற்றிறத்தினுைம் தூண்டப்பட்ட வாசனையின் திண்மையால் தம் மவையே போல அநுபவ நிலையில் வந்து ஆனந்த

1. History of Sanskrit Poetics, p. 345.