பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110

தமிழ்க் காப்பியங்கள்

ளிற் பிறக்கும் என்றும், அவை இன்னவை இன்னவை என்றும் கூறினராயினும், அவர் மெய்ப் பாட்டின் (ரலத்தின்) இயல்பினை விரித்துக் கூறிஞர் அல்லர், பின்னும் உடைமை முதலாக முப்பத் திரண்டு மெய்ப்பாடுகளும் உள்ளன எனக் கூறின வர், அவ்வெட்டைேடு இவற்றிற்குள்ள வேறுபாடும் விளங்க உரைத்திலர். இவற்ருல், மெய்ப்பாட்டியலை ஆசிரியர் சுருக்கமாகவே கூறியுள்ளாரென்பது புலகுைம். வடமொழியில் இவற்றை விரித்துக் கூறும் நூல்கள் பல. அவற்றைப் பின்பற்றிக் கன்னடம் முதலிய திராவிட மொழிகளிலும் சிற்சில நூல்கள் தோன்றியுள்ளன; தமிழிலோ தொல்காப்பி யத்தோடே நின்றது. ஆதலின், மெய்ப்பாட்டியல் பினை நன்கு அறிந்துகொள்ளுதல் அரிதாகும்.

சுவைகளின் தொகை

நாடகச் சுவைகள் எட்டென்பது தமிழ் வட நூலா

ருக்கு ஒப்ப முடிந்ததேயாயினும், தமிழிலே உருத்திரத்தை நீக்கி எட்டாக எண்ணும் ஒரு சாரார் இருந்தனரென்பது பேராசிரியர் உரையால் தெரிய வருதலை முன்னர்க் கண் டோம். காப்பிய ரஸங்களில் சமநிலையை விலக்கினர்.

"மற்று இவ் வெட்டளுேடும் சமநிலை கூட்டி ஒன்ப தென்னுமோ நாடக நூலுட்போலவெனின், அதற்கு ஒர் விகாரம் இன்மையின் ஈண்டுக் கூறியதில னென் பது; அதற்கு விகாரம் உண்டெனின் முன்னை எட்ட னுள்ளும் சார்த்திக் கொள்ளப்படும்”

என்று அதற்குக் காரணம் கூறப்படும். வட நூல்களுள்

1. பரணர், ப. 157. 2. தொல். மெய்ப்பாடு, 3, பேர்.