பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காப்பிய இலக்கணங்கள் 111

சாந்தரளத்தைக் காப்பியத்திற்குக் கொண்டாலும் நாடகத் திற் கொள்வதில்லை. அதற்கு ஒரு ஸ்தாயி பாவம் இல்லை யென்பர். சிலர் நிர்வேத மென்பதே அதன் ஸ்தாயீபாவ மென்பர். அது தத்துவ ஞானத்தால் வருவது. 'செஞ்சாந் தெரியினும் செத்தினும் போழினும், செஞ்சோர்ந் தோடா நிலைமை"யில் அச் சாந்தரஸம் வெளிப்படும். அந்நிலையே நடுவு நிலையாகும். அது தனியே எண் வகை மெய்ப்பாடுகளுள் ஒன்ருகக் கூறப்படாமல் தொல் காப்பியரால் முப்பத்திரண்டு வகையுள் ஒன்ருக அமைக் கப்படுகின்றது. அங்கே பேராசிரியர், நடுவுநிலை யென்பது ஒன்பது சுவையுள் ஒன்றென நாடக நிலையுள் வேண்டப்படும் சமநிலை;............ அது காம வெகுளி மயக்கம் நீங்கிஞேர் கண்ணே நிகழ்வது; இது சிறு வரவிற்ாக லான் இவற்ருெடு கூறினன்' என்ருர். இம் முப்பத் திரண்டோடு ஒத்த வியபிசாரி பாவங்களுள் ஒன்ருகவே பரத முனிவரும் வடமொழி நாட்டிய சாஸ்திரத்தில் இதளுேடு தொடர்புடைய நிர்வேத மென்பதைக் கூறினர். பேராசிரியர் பன்முறையும் நாடகத்துக்குச் சம நிலை உரியதென்று கூறுவர்; ஆயினும், பரதர் முதலியோர் அதனை அங்ங்ணம் வேண்டார். தசருபக நூலாசிரியர் நாடகத்தில் சாந்த ரஸம் புலப்படுத்தப்படாதென்றே உரைப்பர். காவ்யப்பிரகாச நூலாசிரியாாகிய மம்மடரோ, சாந்தாலம் நாடகத்தில் வாராதென்றும் காப்பியத்தில் வருமென்றும் கூறி, நாடக ரஸம் எட்டென்றும் காப்பிய ரஸம் ஒன்பதென்றும் அமைப்பர். பிரயோத சந்திரோ தயம் முதலிய நாடகங்களுள் பெரும்பாலும் ஆத்மஞான உணர்ச்சியின் விளைவாகிய செய்திகளே கூறப்படுதலின் சாந்த ரஸமும் நாடகத்தில் வருமென்று கூறுவாரும் 芭一守T缸”。 -

1. தொல். மெய்ப்பாடு. 12, பேர்.