பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 தமிழ்க் காப்பியங்கள்

"நறிரு ரகமா நவரசமாம் பிள்களகளைப் பெற்ருய் பெருவாழ்வு பெற்ருயே’, "பாலரொடு நாடகமாம், பெண் கொலுவில் வீற்றிருக்க” "ஊனாஸம் ஆறல்லால் உண்டோ செவிகளுண

வான நவரசமுண் டாயிஞய்” என்ற தமிழ்விடு தூதுடையார் கூற்றில் நாடக ரஸமும், காப்பிய ரஸமும் ஒள்பதென்னும் கொள்கை வெளிப்படு: கின்றது. - - - *

காப்பிய ரஸங்கள் எட்டென்பதே வடமொழிக் காவி யாதர்ச நூலாசிரியர் கொள்கை. அதனைப்பிேன்பற்றிய தண்டியலங்கார நூலாசிரியரும், தொல்காப்பிய நூலைப் பின்பற்றிச் சுவை வகுத்த மாறனலங்கார நூலாசிரியரும் சுவை ஸ்ட்டே கூறினர். வீரசோழிய உரைகாரர் ஒன்பது

கூறி, \

"நவைதீர் ஒன்பஃ தாகும் உட்பொருள்

சுவையாய்க் கிளப்பது சுவையென மொழிப' என ஒரு சூத்திரம் காட்டுவர்.

நாடகச் சுவை ஒன்பது கூறிய அடியார்க்கு நல்லார், காப்பியத்திற்கு அங்கமான நவச்சுவை'யெனக் காப்பி யத்திற்கும் ஒன்பது கூறுவர்.

சுவை ஒன்பதென்பது பெரும்பான்மை வழக்காயி னும் வடமொழியில் இவ் வொன்ப தொழிந்த வேறு சில சுவைகளையும் கூறும் ஆசிரியர் உளர். ப்ரேயஸ், வாத் ஸல்யம், பக்தி, சிநேஹம், சிரத்தை, லெளள்யம், ம்ருகயா, அக்ஷா முதலிய ரஸங்களைப்பற்றி அவர் கூறுவர்.' - -

1. Dr. v. Raghavan: Number of Rasas; Journal of Oriental Fesearch, Madras.