பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காப்பிய இலக்கணங்கள் 113

பக்தி ரஸம்

அவற்றுள் பக்தி ரஸத்தைப்பற்றித் தமிழ் நூல் களும் கூறுகின்றன. கடவுளிடத்தும் பெரியோரிடத்தும் பூணும் அன்பைப் பக்தி யென்பர். அந்தப் பக்தி உணர்ச்சியினல் பிற்காலத்தில் தமிழில் எழுந்த நூல்கள் மிக அதிகம். அவற்றைப் பக்தி ரஸம் உடையன வாகக் கொள்ளவேண்டும். சேக்கிழாரை மீளுட்சிசுந்தரம்

பிள்ளையவர்கள்,

"என்றும் பத்தி ரசங்கனி கனியே' 'பத்திச் சுவை நனி சொட்டச் சொட்டப்

பாடிய கவிவலவ” -

என்று பாராட்டுகையில் அவர் இயற்றிய பெரிய புராணத்தில் பக்தி ரஸம் மலிந்திருப்பதைக் குறித்துள் ளார். இங்கே பக்தியைச் சுவையாகக் கூறுதல் காண்க.

பூரீ கிருஷ்ண சைதன்யருடைய அடியார்களாகிய வங்காள வைணவர்கள் இந்தப் பக்தி ரஸத்தைப்பற்றி ஆராய்ந்து நூல்கள் எழுதியுள்ளனர். ரூப கோஸ்வாமி யென்பவர் எழுதியுள்ள பக்தி ர்ஸாம்ருத ஸ்லிந்து, உஜ்வல நீலமணி யென்ற இரண்டு நூல்களும் இந்த ரஸத்தைப் பற்றி விரித்துக் கூறுகின்றன். பக்திச் சுவையை மதுரம் அல்லது சிருங்காரம், ஸ்க்யம், வாத்ஸல்யம், தாஸ்யம் என நான்கு வகை ஆக்குகின்றனர். அவற் றிற்கு ஏற்ற இலக்கணங்களைத் தமிழிலும் காணலாகும்.

உவகைச் சுவை தொல்காப்பியர் எட்டுச் சுவைக்கும் உரிய மெய்ப் பாடுகளை முதலிற் கூறினும், காமச் சுவையின் பாவங்

1. சேக் கிழார்.பிள்ளைத் தமிழ், செங்கீரைப். 7.

2. டிெ தாலப். 8. 3. J. O. R. M. Vol. XI, p. 96,

த. கா-8