பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காப்பிய இலக்கணங்கள் - 117

பாட்டைப்பற்றியும், இறைச்சி உள்ளுறைகளைப் பற்றியும் வரையறுத்துக் கூறுதலை நோக்கின், அப் பழங்காலத்திலேயே நம் தமிழ் நாட்டில் கவியழகை அறிந்து சுவைக்கும் தன்மை வளம் பெற்றிருந்த தென்று நினைக்க இடம் உண்டாகின்றது. -

வடிமொழியில் அணி, சுவை ஆகியவற்றைப்பற்றி மிக விரிவாக இலக்கணங்கள் அமைந்திருக்க, தொல் காப்பியத்தில் அவை சுருக்கமாகவே உள்ளன என்று தோற்றலாம். அந்தப் பழங்காலத்திலேயே இத்துணை வரையறையோடு தொல்காப்பியர் கூறுவதைப்பார்த்தால் அவர் இங்கு வேண்டியவற்றைச் சுருக்கமாக எடுத் துரைத்தாரென்றும், அவற்றைப்பற்றி விரிவான நூல்கள் தனியே தமிழில் இருந்திருத்தல் கூடுமென்றும் சொல்லலாம்.