பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காப்பிய இலக்கணங்கள் 121

நான்கையும் கூறுவதென்பதை முன்னர்க் கண்டோம். தண்டியாசிரியர் முதலியோர் காப்பியங்களைப் பெருங்காப் பியம், காப்பியம் என வகுக்கின்றனர். அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கையும் கூறுவது பெருங்

காப்பியமென்றும், அவற்றில் ஒன்றும் சிலவும் குறைந்து வருவது காப்பியமென்றும் அவர் கூறுவர். இங்ங்னம் நாற்பொருளையும் கருதிப் பகுக்கப்படும் பகுப்பு நாடகக் காப்பியங்களுக்கும் உண்டு என்று தெரிய வருகின்றது.

கதை அமைப்பு

விலக்குறுப்பில் இரண்டாவதாகிய யோனி என்பது நாடகத்தில் உள்ள கதையை நோக்கிப் பகுக்கப்படுவது. அவை நான்கு வகைப்படும். அவை, உள்ளோன் தலைவ. கை உள்ளதோர் பொருள்மேற் செய்தலும், இல்லோன் தலைவகை உள்ளதோர் பொருள்மேற் செய்தலும், உள் ளோன் தலைவனுக இல்லதோர் பொருள் மேற் செய்தலும், இல்லோன் தலைவனுக இல்லதோர்.பொருள் மேற் செய்த லும் என்பன. சிலப்பதிகாரம் உள்ளோன் தலைவனுக உள்ளதொரு பொருள்மேல், சித்திரிக்கப்படாது பட் டாங்குக் கிளந்து பலவினப் பாட்டால் வந்ததென்று. கூறுவர் அடியார்க்கு நல்லார்.

கதையின் வகை இங்கே நான்காகக் கூறப்பட்டது. வீரசோழிய உரையாசிரியர் ஐந்தாகக் கூறுவர்.

நாடக இலக்கியங்களுக்கு அமைக்கும் இவ்வகை யையே காப்பியங்களுக்கும் கோடல் பொருந்தும். உள்ளோன் தல்ைவகைச் செய்தல் சரித்திரக் காப்பியங்க

1. வீரசோழியம், பவானந்தர் கழகப் பதிப்பு, 118, 119. யோனி யென்பதை ஒளி யென்று தவருகப் பதிப்பித்துள்ளனர்.