பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 தமிழ்க் காப்பியங்கள்

ளாகும். இல்லோன் தலைவனுக இல்லதோர் பொருள் மேற் செய்யும் நாடகக் காப்பியம் தொல்காப்பியர் கூறும் விருந்தென்னும் வகையுள் அட்ங்கும்.

விருத்தி

விருத்தி யென்னும் விலக்குறுப்பு நான்கு வகைப் படும். இதுவும் கதைப் பொருள் குறித்த பகுப்பாகும். அறம் பொருளாகத் தெய்வ மானிடர் தலைவராக வருவது சாத்துவதி யெனவும், பொருள் பொருளாக வீரராகிய மானிடர் தலைவராக வருவது ஆரபடி யெனவும், காமம் பொருளாகக் காமுகராகிய மக்கள் தலைவராக வருவது கைசிகி யெனவும், கூத்தன் தலைவகை நடன் நடி பொரு ளாகக் காட்டியும் உரைத்தும் வருவது பாரதி எனவும் கூறப்படும். -- .

கதைத் தொடர்ச்சி

ஐந்தாவது விலக்குறுப்பாகிய சந்தி யென்பது கதைப் பொருளின் தொடர்ச்சியைப்பற்றியவைகை. அவை முகம், பிரதிமுகம், கருப்பம், விளைவு, துய்த்தல் என இவை. இவற்றை வித்து முளை, தழைத்தல், விளைவு, துய்த்தல் எனவும் கூறுவர்.

முகமாவது உழவினுற் சமைக்கப்பட்ட பூமியுள் இட்ட வித்தானது பருவஞ்செய்து முளைத்து முடிவது போல்வது. பிரதிமுகமாவது, அங்ங்னம் முளைத்தல் முதலாய் இலை தோன்றி நாற்ருய் முடிவதுபோல்வது; கருப்பமாவது, அந்நாற்று முதலாய்க் கருவிருந்து

1. தண்டி. 8, உரை.