பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காப்பிய இலக்கணங்கள் 123

பெருகித் தன்னுட் பொருள் பொதிந்து கருப்பம் முற்றி நிற்பதுபோல்வது; விளைவாவது கருப்ப முதலாய் விரிந்து கதிர் திரண்டு காய் தாழ்ந்து முற்றி விளைந்து முடிவது போல்வது;துய்த்தலாவது, விளைந்த பொருளை அறுத்துப் போரிட்டுக் கடாவிட்டுத் தூற்றிப் பொலி செய்து கொண்டு போய் உண்டு மகிழ்வது போல்வது.

நாடகக் காப்பியங்களுக்குரிய இவ்விலக்கணம் இயற் றமிழ்க் காப்பியங்களுக்கும் உரியனவே ஆகும். தண்டி யாசிரியர் பெருங்காப்பியத்தில் உள்ள செய்திகள் சந்தி போலத் தொடர்ந்து வரவேண்டுமென்று இலக்கணம் வகுக்கின்ருர். நாடகத்துக்குரிய சந்தியின் இயல்பு இயற் றமிழ்க் காப்பியத்திலும் அமைதல் வேண்டுமென்பதே. அவர் கருத்து. - பன்னிரு பாட்டியலில் தொடர்நிலைச் செய்யுளின் இலக்கணம் சில சூத்திரங்களால் கூறப்படுகின்றன. அங்கே மூன்று வகையான பிரிவுகள் காணப்படும்.

"வித்தெண் துளிகொடி தலைவைெடு மேவி

நடைபெற வருவது தொடர்நிலை யென்ப" என ஒரு சூத்திரத்திலும்,

'வித்தே எண்துளி விருந்தியல் ೧ಹT4.೧ur

நடைபெற வருவது தொடர்நிலை வகையே’

என மற்ருெரு சூத்திரத்திலும் வித்து, துளி, கொடி என மூன்று கூறப்படுகின்றன. எண் என்பது துளிக்கு அடையாகக் கொள்ளலாம். மூவகைத் தலைவளுேடு பொருந்திய காப்பியங்களை முறையே இப் பெயரால்

1. பன்னிரு பாட்டியல், 347, 348, 349, 350.