பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 தமிழ்க் காப்பியங்கள்

குறித்தனரென்று கொள்ள இடமுண்டெனினும், அம் மூன்றும் ஒருங்கே வருதல் வேண்டுமென்னும் பொருள் பட அச்சூத்திரங்கள் அமைந்திருக்கின்றன. அதனல் சந்தியைப்போலக் கதைப் பொருளின் தொடர்பை வகுக்கும் வகையுள் இம்மூன்றையும் கொள்ளுதல் பொருந்துமோ என்பது ஆராய்தற்குரியது. வித்து என்பது ஐவகைச் சந்தியுள் ஒன்ருகிய முகம் போல்வது என்றும், துளி யென்றது அவ் வித்து முளைத்துத் தழைக்கும் அளவும் உதவுகின்ற மழையைக் குறித்து நிற்கின்றதாதலின் அது பிரதிமுகம் கருப்பம் என்ப வற்றைப் போல்வதென்றும், கொடி யென்றது நன்ருக வளர்ந்து மலரும் கனியும் செறிந்த கொடியைக் குறித்து நின்று விளைவு துய்த்தல் என்னும் இரண்டனையும் போல்வதென்றும் கொள்ளலாகும். முன்னே நாடக நூல்களுக்குக் கூறிய ஐந்து சந்திகளும் காப்பியங் களுக்குக் கூறப்படுங்கால் சுருங்கி மூன்ருதல் இயல்பே யாகும். பன்னிரு பாட்டியலில் தொடர்நிலைச் செய்யுள் இலக்கணம் வகுக்கும் மற்ருெரு சூத்திரம்,

"வென்றிகொள் இருக்கை என்றிவை அனைத்தும் சந்தி யாகத் தந்துநிலை பெறுமே” - என்று குறிக்கின்றது.

காப்பியங்களுக்குரிய பொருளை இங்ங்ணம் உழவோடு உவமித்துக் கூறும் மரபு இலக்கணங்களிலும் காணப்படு கின்றது. திருக்குறளாசிரியர் புலவர்களை, சொல்லே ருழவர்' என்று குறித்தனர். அவ்வுருவகத்தை விரித்துத் தமிழ்விடு தூதுடையார். -

- ч е е * * * - சொல்லேர் உழவரகம்

தீயாது சொல்விகளயும் செய்யுளே,”

'திகழ்பா ஒரு நான்கும் செய்யுள்வரம் பாகப்

புகழ்பா வினங்கள்மடைப் போக்கா-நிகழவே

& &