பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 தமிழ்க் காப்பியங்கள்

2. சுவையணி : அச்சம் :

கையில் விரல்நெரித்துக் கால்தள்ர்ந்து வாய்புலர்ந்து

மெய்பணிப்பத் தாளில் விழுமினே-உய்யக் களிவேக மாருக் கரிபுரளச் செங்கை ஒளிவேல் உகைப்பான் இனி'

(வீரசோழியம், அலங்காரப். 28, மேற்.)

3. கைநெரித்து வெய்துயிர்ப்பக் கால்தளர்ந்து மெய்

பனிப்ப மையரிக்கண் நீர்ததும்ப வாய்புலர்ந்தாள்-தையல் சினவேல் விடலேயால் கையிழந்த செங்கட் புனவேழம் மேல்வந்த போது.” .

(தண்டியலங்காம், மேற்.)

நாடகச் சாதி

கர்வையின் பின்வரும் விலக்குறுப்பு, சாதி யெனப் படும். இது நாடகக் காப்பிய வகையாகும். இவை பத்து. வீரசோழிய உரையாசிரியர் கூறும் பெயர்களுக்கும் தண்டி யலங்கார உரையாசிரியர் கூறும் பெயர்களுக்கும் சிறிது வேறுபாடு உண்டு. வீரசோழிய உரையாசிரியர் கூறும் வகை, பதிப்பில் உள்ளபடியே காட்டப்படுகின்றன.

(1) வீரம், (2) கூச்சம், (3) அர்ப்பாயம், (4) பேய்க்காரம், (5) வியோகம், (6) பாணம், (7) சல் லாபம், (8) வீழினி, (9) உத்தாரமடங்கம், (10) பிரா சனம். இவற்றின் இலக்கணங்களையும் அவ்வுரை யாசிரியர் எடுத்துரைக்கின்றனர். தண்டியலங்கார உரை யாசிரியர் கூறுவன நாடகம், பிரகரணம், பாணம்,

1. வீரசோழியம், பொருட்படலம், 21, உரை. 2. உத்தரட்டாங்கமென்பது போலும். 3. இது பிரகசனம் போலும்.