பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 தமிழ்க் காப்பியங்கள்

"ஆரியம் தமிழெனும் சீர்நடம் இரண்டினும்

ஆதிக்கதையை அவற்றிற் கொப்பச் சோதித் திடுவது சேதமென் ருகும்”

என்பது சூத்திரம்.

இதல்ை பழங்கதையை நாடகமாக்குவதற்குச் சில வரையறைகள் உண்டென்பது பெறப்படும். காப்பியங். களின் கதையை நாடகமாக்கி அமைப்பது உண்டென் னும் மரபும் தெரிய வருகின்றது. ஆங்கிலத்திலும் வட மொழியிலும் இத்தகைய அமைதியைக் காணலாம். தமிழில் முற்காலத்தில் இருந்த நூல்கள் காணப்பட்டில. இப்பொழுது உரைநடையில் எழுதப்படுகின்ற நாடகங் களில் சேதமென்னும் இவ்வுறுப்பைக் காணலாம்.

இவ்வளவும் சிலப்பதிகாரத்தின் உரையில்ை அறியக் கிடக்கும் செய்திகளாகும்.

வீர்சோழிய உரையில் கண்ட செய்திகள்

வீரசோழிய உரையாசிரியர் அகப்புறப் பொருள் இன்னவென்று விளக்குவதற்கு, -

'அறனும் வாழ்க்கை ஒருதலைக் காமமும்

பொதுவியல் பாடாண் நயநிலைப் படலமென்

றிவைகள் அனைத்தும் அகப்புற மாகும்.” என ஒரு சூத்திரம் காட்டுகின்ருர். அதனுட் கூறப்படும் நயநிலைப் படலமென்பது நாடகம் அல்லது கூத்த மார்க்கம் எனவுரைத்து நாடக சம்பந்தமான பல செய்திகளை எடுத்து இயம்பினர். யோனி, விருத்தி, சாதி, சந்தி, சுவை யென்பன அவரால் விரிக்கப்படுகின்றன.

i.

1. பொருட் படலம், 21, உரை.