பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காப்பிய இலக்கணங்கள் 129

யோனியைப்பற்றிச் சொல்கையில், ஐவகைக் கதை யமைப்பை எடுத்துரைக்கிருர், சந்தி நிருதை, அநிருதை, சந்தியா நிருதை என்ற மூன்று பெரும் பிரிவில் அந்த ஐந்தும் அடங்கும். (1) உள்ளோன் தலைமகனுக உள் பொருளும் இகப்பொருளும் கூறுவது, (2) உள்ளோன் தலைமகனுக இகப்பொருளும் இரவுப்பொருளும் கூறுவது. (3) இல்லோன் தலைமகளுக உள்பொருளும் இகப் பொருளும் கூறுவது, (4) இல்லோன் தலைமகனுக இல் பொருளும் இகப்பொருளும் கூறுவது, (5) இல்லோன் தலைமகனுக இல்பொருள் கூறுவது என்பன அவ் வைந்து பிரிவுகள். விருத்தி நால்வகை என்பதையும், நாடகம் பத்துச் சாதியென்பதையும் விளக்கியபின், சந்தியையும் அதன் வகைகளையும் விரித்துரைக்கிரும்.

சந்தி யென்பன முகம், பயிர் முகம், கர்ப்ப முகம், வைரி முகம், நிருவாணம் என்பவை. அவ் வைந்துக்கும் அங்கங்கள் அறுபத்து நான்கு. உவகேபம் முதல் கரண பேதம் ஈருகப் பன்னிரண்டும் முகமென்னும் சந்திக்கு அங்கங்கள்.விலாசம் முதல் வருண சங்காரம் ஈருக உள்ள பதின்மூன்றும் பயிர்முகத்தின் அங்கங்கள்; அபூதாரனம் முதல் ஆகேவம் வரையிலுள்ள பன்னிரண்டும் கர்ப்ப முகத்தின் அங்கங்கள். அபவாதம் முதல் ஆதானம் ஈருகப் பதின்மூன்றும் வைரிமுகத்தின் அங்கங்கள். அந்தி முதல் சங்காரம் ஈருக உள்ள புதினன்கும் நிருவானத்தின் அங்கங்கள்.

முகம் என்பது. முளை தோன்றுதலைப்போல நாட கத்தில் பொருள் தோன்றுவது என்றும், பயிர்முகம் என்பது முளை வளர்ந்து முற்றியதுபோலத் தலைமக்கள்

1. இல் பொருளும் என்று இருக்கவேண்டுமேன்று தோற்றுகிறது.

- 9-سrچ .صلى الله عليه وسلم