பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காப்பிய @ಂಹಿಹಣTಕೊಹir 131 -

'பண்கள்முதற் பெண்களொடும் பாலரொடும் நாடகமாம்

பெண்கொலுவில் வீற்றிருக்கப் பெற்ருயே' என்று வருணிக்கின்ருர். தமிழரசிருக்கை நாடகத்தால் நிறைவேறுகின்றது என்ற அவர் கருத்து இதில் அமைந்திருக்கின்றது. .

வடமொழியிலும் வாமனுசாரியர் நாடகமே காப்பி யங்களிற் சிறந்ததென்பர்: ஆங்கில அறிஞர்களும் இங்ங்ணமே உரைப்பர்.

"நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும்

பாடல் சான்ற புலனெறி வழக்கம்”

என்ற தொல்காப்பியச் சூத்திரம் புலவர் இயற்றும் பனுவல்களில் உள்ள மரபை இரண்டு வழக்கினுள் அடக்கிக் கூறுகிறது. செய்யுள் வழக்கு, உலக வழக்கு என்பன வேறு வகை. இச்சூத்திர உரையில் இளம் பூரணர், 'நாடக வழக்காவது சுவைபட வருவன வெல்லாம் ஓரிடத்து வந்தனவாகத் தொகுத்துக் கூறல்” என்று உரைத்தார். நாடகம் சுவை மயமாக அமைவது என்பதும், ஏனைய செய்யுட்களிலும் அந் நாடக வழக்குக் காணப்படும் என்பதும் இச் சூத்திரத்தாலும், உரையாலும் தெளிவாகின்றன. 'நாடக வழக்கு, கவிஞர்களுடைய உள்ளத்தால் கற்பனை செய்யப்பட்டுப் படிப்போருக்கு இனிமை பயப்பது' என்பர் ரீ மகாமகோபாத்தியாய ஐயரவர்கள். - -

தமிழ் நூல்களில் பழையனவாகிய அகப்பொருட் டொகை நூற் செய்யுட்கள் யாவும் கூற்று வகையாக அமைந்து, இந்நாடக இலக்கிய மரபைப் பின்பற்றுதல் இங்கே நினைத்தற்குரியது. . .

1. கண்ணி. 33. 2. r. iii : 30. 3. தொல். அகத். 56, 4. குறுத்தொகை, நூலாராய்ச்சி, ப. 18.