பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயற்றமிழ்க் காப்பிய இலக்கணங்கள்

- காப்பியக் கவிஞன் காப்பியங்களைப் பாடும் கவிஞனைப் பிறவகைக் கவிஞர்களிலும் சிறந்தவனுகக் கொள்ளுதல் வழக்கம். பெருங்காப்பியம் பாடியவனை மகாகவி என்று வழங்குதல் மரபு. காப்பியங்களைப் பாடும் கவிஞர்களை அகலக்கவி, வித்தாரகவி, பெருங்கவி என்று பாராட்டுவர்.

பருனர் பாட்டியல் என்பதில் வரும் சூத்திரம் ஒன்று அகலக் கவியின் இலக்கணத்தைப் பின்வருமாறு கூறும்:

'அகலக் கவியே மங்கல மாலை

கலிவெண் பாட்டொடு களிறே குதிரை மற்றவை பொருளாப் பிறவும் காட்டுக மருங்கின் நல்லோர் ஆய்ந்த யோனியும் பொருளும் ஒன்பது சுவையும் நால்வகை விருத்தியும் கூட தோக்கிக் குறித்தொரு வன்மேல் பாடும் செய்யுட் பாடு வோனே." மங்கல மாலை முதலியவை தொடர்நிலைச் செய்யு ளாகிய பிரபந்தங்கள். அவற்றைப் பாடுகிறவனை அகலக் கவி என்ருர். அதனோடு யோனி, பொருள், சுவை, விருத்தி ஆகியவற்றை அமைத்துப் பாடுபவனையும் அகலக் கவி என்ருர். இவை நாடகக் காப்பியங்களில் வருவன என்பதை முன்பு ஆராய்ந்தோம். காப்பியக் கவிஞளுகிய

- x . همیه قم و تعاع 87۰ «ه به پشه» با نام گونه م . 1