பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காப்பிய இலக்கணங்கள் 133

அகலக்கவி இயற்றும் காப்பியமும் நாடகக் கவிஞன் இயற்றும் காப்பியமும் பல வகையில் ஒப்புமை யுடையன என்பதை இதல்ை உணரலாகும். யாப்பருங்கல விருத்தியுரையாசிரியர்,

வித்தார கவியாவான் மும்மணிக்கோவையும், பன் மணி மாலையும், மறமும், கலிவெண்பாவும், மட லூர்ச்சியும் முதலாகிய நெடும்பாட்டும், கோவையும், பாசண்டமும், கூத்தும், விருத்தமும், கதை முதலா கிய செய்யுளும், இயலிசை நாடகங்களோடும் கலை நூல்களோடும் பொருந்தப் பாடும் பெருங்கவி எனக் கொள்க' ~ .

என்ருர்.

காப்பியத்தின் பகுப்பு காப்பியங்களைத் தண்டியலங்கார ஆசிரியர் பெருங் காப்பியம், காப்பியம் என்று இரு வகையாகப் பகுப்பர். பிற்காலத்தில், அவரைப் பின்பற்றிய மாறனலங்கார ஆசிரியரும் அங்ங்னமே அமைத்தனர். -

அறம் பொருள் இன்பம் வீடு என்னும் நாற் பொருளையும் கூறுவது பெருங் காப்பியம்; அந் நான்கனுள் ஒன்றேனும் பலவேனும் கூறப்படாவிடின் அது காப்பியம் ஆகும். -

'அறமுதல் நான்கினும் குறைபா டுடையது

காப்பியம் என்று கருதப் படுமே.” 'பெருங்காப் பியங்காப் பியமெனும் பெற்றித்தால்

சுருங்காப் பொருட்டொடரும் சொல்லிற் -பொருந்தவற்

ஒன்றும் பலவும் பொருளிற் குறைவுறுமேல் (றுள் என்று மதுகாப் பியம்”

1. பா. வி. ப. 513, - 2. தண்டியலங்காரம், 10.

3, மாறனலங் காரம், 71.