பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காப்பிய இலக்கணங்கள் 135

நோக்கியதாகும். தமிழில் அவையும் காப்பியங்களாகவே கூறத்தகும்.

புராணம் என்பது பழமையென்னும் பொருளுடை யது. சிவபுராணம் என்பதற்குச் சிவனது அநாதி முறைமையான பழமை எனத் திருவாசகத்தில் விளக்கம் எழுதியிருத்தல் காண்க. தொன்மை, தோலென்னும் வனப்புக்கள் பழமையென்னும் பொருளையுடைய சொற் களாதல் இங்கே ஒப்பு நோக்கற்குரியது. புராணம் ஐவகை இலக்கணம் உடையதென்பர் வட நூலார். அதனைப் பின்பற்றித் தமிழ்க் கூர்ம புராண முடையாரும் கூறினர்.

விளம்பனம் என்பது ஒன்று யாப்பருங்கல உரையில் சொல்லப்படும். 'விளம்பனத் தியற்கையும்' என்னும் சூத்திரப் பகுதிக்கு உரை எழுத வந்த உரையாசிரியர்,

'விளம்பனத் தியற்கை விரிக்கும் காலை ஆரியந் தமிழொடு நேரிதின் அடக்கி உலகின் தோற்றமும் ஊழி இறுதியும் வகைசால் தொண்ணுாற் றறுவர தியற்கையும் வேத நாவின் வேதியர் ஒழுக்கமும் ஆதி காலத்தரசர் செய்கையும்

1. ஸ்தல புராணங்கள் வடமொழியில் சரித்திரத்தைமட்டும் புலப் படுத்திக் கொண்டிருக்குமே பன்றி அவற்றிற் கற்பனைகள் அமைந்திரா. அவற்றை வடமொழியில் உள்ளவாறே பண்டைக் காலத்தில் பலர் தமிழில் மொழிபெயர்த்து வந்தார்கள். பின்பு சிலர் சில வேறுபாடுகளே அமைத்தார்கள். சிலர் சொல்லணி பொருளணி முதலியவற்றை மட்டும் அமைத்துப் பாடி வந்தார்கள். பின்பு சில தமிழ்க் கவிஞர் ஸ்தல புராணங் கண், பெருங்காப்பிய வில’ என்னும் தண்டியலங்காரச் சூத்திரத்தின்படி காவிய இலக்கணங்களை அமைத்துப் பாடினர்கள். பெரிய புராணம், கந்த புராணம் முதலியவற்றைப் பின்பற்றி காடு ககரச் சிறப்புகளுடன் விரி வாகப் பழைய நூற் கருத்துக்களையும் சாஸ்திரக் கருத்துக்களேயும் அமைத் துப் பலர் செய்ய ஆரம்பித்தனர். -ழு மீளுட்சிகந்தரம் பிள்ளையவர் கண் சரித்திரம், முதற் பாகம், ப. 102.