பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

... 36 தமிழ்க் காப்பியங்கள்

அவ்வந் நாட்டார் அறியும் வகையால்

ஆடியும் பாடியும் அறிவரக் கிளத்தல்” என்ற சூத்திரத்தை மேற்கோள் காட்டினர். இச் சூத்தி ரத்தையே வீரசோழிய உரையாசிரியரும் எடுத்துக் கூறு. கின் ருர். ஆடலும் பாடலும் சம்பந்தப்பட்ட இது புரா ணத்தைப் போன்றதொன்றைத் தன் உள்ளுறை பொரு ளாகக் கொண்டதுபோலத் தோற்றுகின்றது. உலகின் தோற்றம் முதலிய செய்திகள் புராணத்தின்கண்ணும் வருவன. -

  • ២សលា காரிகை, யாப்பிற் புராணமே யாம்’ என்னும் வச்சணந்தி மாலைச் சூத்திரம் புராண இலக் கணம் கூறுகின்றது. குல வரலாறு அமைதல் புராணத் தின் இலக்கணம் என்று அதனுற் புலப்படும்.

புராணத்தில் நாற்பொருளும் ஒருங்கே கூறப்படுதல் அருமையாகும். பெரும்பாலும் பக்தி ரஸமும், வீட்டு நெறிக்குரிய செய்திகளுமே புராணங்களில் அமையும். ஆதலின், அவற்றைப் பெருங் காப்பியங்களிற் சேர்க் காமல் காப்பிய வகையாகவே கொள்ளல் வேண்டும். இக் கருத்தை,

"அறம்பொருளின் பம்வீட்டிற் குறைபாடாகப்

பெறுவதுகாப் பியமாகும், புராண மாகும்”

என்று சிதம்பரப் பாட்டியலாரும் தெரிவித்துள்ளார்.

பெருங்காப்பிய இலக்கண ஆராய்ச்சி

காப்பிய வகைகளில் சிறந்ததாகிய பெருங்காப்பியத் தின் இலக்கணம் முதல் முதலில் தமிழில் விளக்கமாகத்

1, ப. வீ. ப. 525. 2. விராச ரியம், அலங்காரப், 39, உரை. 3. சிதம் பரப் பாட்டியல், 42, .