பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காப்பிய இலக்கணங்கள் 137

56TquaಏಹTT நூலில்தான் காணப்படுகின்றது. அவ் விலக்கணத்தைப் புலப்படுத்தும் சூத்திரம் வருமாறு:

பெருங்காப் பியநிலை பேசுங் கால, வாழ்த்து வணக்கம் வருபொருள் இவற்றின் ஒன்று ஏற்புடைத் தாகி முன்வர இயன்று, நாற்பொருள் பயக்கும் நடைநெறித் தாகித் தன்னிகர் இல்லாத் தலைவனே உடைத்தாய், மலைகடல் நாடு வளநகர் பருவம்

இருசுடர்த் தோற்றம்என் றினேயன புனைந்து, நன்மணம் புணர்தல் பொன்முடி கவித்தல் பூம்பொழில் நுகர்தல் புனல்விளை யாடல் தேம்பிழி மதுக்களி சிறுவரைப் பெறுதல் புலவியிற் புலத்தல் கலவியிற் கலத்தல்என்று இன்னன புன்ந்த நன்னடைத் தாகி, மந்திரம் தூது செலவிகல் வென்றி சந்தியிற் ருெடர்ந்து, சுருக்கம் இலம்பகம் பரிச்சேதம் என்னும் பான்மையின் விளங்கி, நெருங்கிய சுவையும் பாவமும் விரும்பக் கற்ருேர் புனையும் பெற்றிய தென்ப.

இச் சூத்திரத்தால் பெறப்படும் பெருங்காப்பிய இலக் கணங்களை ஒரு வகைப்படுத்தி அமைத்துக்கொண்டால் ஆராய்தற்குத் துணையாகும். இச் சூத்திரம் பெருங்காப் பியங்களின் உறுப்புக்களைப்பற்றியும், பொருளின் கூறுகளைப்பற்றியும், அணியமைதியைப்பற்றியும் கூறு கின்றது. - -

உறுப்புக்கள் : முன் உறுப்பு:-வாழ்த்து,வணக்கம், வருபொருள் உரைத்தல் என்பவற்றுள் ஒன்று, முதல் உறுப்பாக வரும்.