பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/159

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காப்பிய இலக்கணங்கள் ,141

என்று கூறுகின்றது. இம் மூன்றும் ஒருங்கே முன்வர வென்று கூறவில்லை. இம் மூன்றும் ஓரினப்பட்டனவே யாதலின் ஏதேனும் ஒன்று வரவேண்டும் என்ருர், வெவ்வேருயின் எல்லாம் வரவேண்டுமென்றே இலக் கணம் செய்வார். ஆதலின், உரைகாரர் கொண்ட பொருள் மாறுபாடுடையதாகும். கடவுள் வாழ்த்து வகையாகிய இம்மூன்றனுள் ஒன்று வருகவென்பதே ஆசிரியர் கருத்தென்று தோன்றுகிறது. வடமொழி மரபும் அதுவே. வருபொருளென்ற தொடருக்குக் கடவுளான் வருபொருளென்றும், அவர்பால் வருபொரு ளென்றும் உரை கூறி வஸ்து நிர்த்தேசிம் என்பதனோடு பொருத்திக்கொள்க. நூற்கண் வருபொருளைப் பதிக மென்னும் பகுதியாற் கூறுதல் தமிழ் மரபு. அதை நினைந்து இங்ங்னம் வருபொருள் என்பதற்குப் பொரு ளுரைத்தார் போலும். -

உறுப்புக்களின் பெயர்கள்

Gഥയേ காட்டிய தண்டியலங்காரச் சூத்திரத்தில் காப்பிய உறுப்புக்களைப்பற்றி வேறு ஒன்றும் கூறப்பட வில்லை; ஆயினும் அவ்வுறுப்புக்களின் பொதுப் பெயர் கள் உள்ளன. சருக்கம், இலம்பகம், பரிச்சேதம் என்னும் பகுதிகளோடு விளங்கும் என்பது காண்க. இவை காப்பியப் பிரிவுகள்; வடமொழியைத் தழுவி அமைந்தன. மாறனலங்காரம் காண்டம் என்பதையும் சேர்த்து உரைக்கும். -

இவற்றுள் காண்டம் என்பது பேருறுப்பு; சிலப்பதி காரம், பெருங் கதை, கந்த புராணம், கம்ப ராமாயணம் முதலியவற்றில் அவ்வுறுப்பைக் காணலாம். காண்டம்

1. சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, திருவிளயாடற் புராணம் என்பவற்றில் இவ் வுறுப்பைக் காணலாம்.