பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/160

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 தமிழ்க் காப்பியங்கள்

தொகுதி, பல சிற்றுறுப்புக்களின் தொகுதி. சருக்கம் முதலியன சிற்றுறுப்புக்களின் பெயர்கள். சருக்க மென்பது சூளாமணியிலும், பாரதத்திலும், பிற்காலத்துப் புராணங்கள். சிலவற்றிலும் காணப்படும். இலம்பகம் என்பது சிந்தாமணியில் உண்டு. பரிச்சேதம் என்பது தமிழ் நூல்களில் வழங்கவில்லை.

இவற்றையன்றிக் காதை, அத்தியாயம், கதி, படலம் முதலிய பெயர்கள் காப்பிய உறுப்புக்களுக்கு வழங்குகின்றன. . -

இவற்றுள் காதை யென்பதைச் சிலப்பதிகாரத் திலும் மணிமேகலையிலும் காணலாம். காதை என்பது கதைபொதி பாட்டென்பர் அடியார்க்கு நல்லார். வட மொழியில் ஒருவகை இசைப்பாட்டைக் காதா என வழங்குவர். பெளத்த நூல்களில் இப்பெயர் வழக்கு மிகுதியாக உள்ளது. ஆதலின் காதை யென்பதற்குப் பாட்டென்றே பொருள் கோடல் பொருந்தும். நீலகேசி உரையாசிரியர் பாட்டைக் காதையென்றே குறிப்பர். ஒரு பாட்டினுள் மற்ருெரு பாட்டு மறைந்திருக்கும் சித்திரகவிக்குக் காதை கரப்பு என்னும் பெயர் யாப்பருங் கல விருத்தியிலும், தண்டியலங்காரத்திலும் காணப்படும். அதன் இலக்கணத்தைக் கொண்டு காதை என்பது செய்யுள் என்னும் பொருள் உடையதென்பதை ஊகிக்கலாம்.

காதை கரப்பது கள்தை கரப்பே' என்ற மாறனலங்காரச் சூத்திரத்திற்குரிய உரையாகிய,

1. இராமநாதபுரம் ஸ்க்ஸ்தான மகாவித்வான் பாஷா கவிசேகர ரா. இராகவையங்கார் தாம் இயற்றிய பாரி காதையென்னும் தொடர் நிலச் செய்யுளில் உள்ள பிரிவுகளுக்குத் திறம் என்ற பெயரை அமைத் துள்ளார். - - - -

2. கு. 289.