பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காப்பிய இலக்கணங்கள் 143

"புலவரால் குறிக்கப்பட்ட செய்யுளும் பிறிது ஒரு செய்யுட்குக் கூடுவதான எழுத்துக்கள் புகுதாதே தாம் குறித்த பழைய செய்யுள் கரந்து எழுத்துப் பிறக்கிக் கொள்ளலாம்படி பாடுவது காதை கரப்பாம் என்றவாறு'

என்பதலுைம் இது வலியுறுகின்றது.

சிலப்பதிகாரம், மணிமேகலை, பெருங்கதை என்னும்

காப்பியங்களில் உள்ள உறுப்புக்களில் ஒவ்வொன்றும்

ஒவ்வொரு பாட்டாக அமைந்திருத்தலின் அவை காதை யெனவே வழங்கப்பட்டன.

அத்தியாயம் என்பது பாகவதத்திலும், குசேலோ பாக்கியானத்திலும் காணப்படும். கதியென்பது பிரபு லிங்க லீலையில் உள்ளது. கந்த புராணம், கம்ப ராமா யணம் முதலியவற்றில் படலமென்பதைக் காணலாம். இப் பெயர் தமிழ் இலக்கண நூல்களின் உறுப்புக் களுக்கே பண்டைக்காலத்தில் வழங்கி வந்தது. இலக் கண நூலைப்பற்றிய இயல்பை வகுக்கும் தொல்காப் பியனுர், -

"ஒருபொருள் நுதலிய சூத்திரத் தானும்

இனமொழி கிளந்த ஒத்தி னுைம் பொதுமொழி கிளந்த படலத் தானும் மூன்றுறுப் படக்கிய பிண்டத் தானும்என்று ஆங்கனே மர்பின் இயலு மென்ப” - என்று கூறுவர். இதில் படலத்தைப் பல ஒத்துக்கள் அடங்கிய பகுதியாகக் கூறுதல் காண்க. பின்னும் படலத்தின் இலக்கணத்தை, -

"ஒருமொழி யின்றி விரவிய பொருளால்

பொதுமொழி தொடரின் அதுபடலம் ஆகும்” என்று அமைக்கின்றனர். அப் படலங்களை உரையாசிரி.