பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 தமிழ்க் காப்பியங்கள்

யர்கள் அதிகாரம் என்று கூறுவர். "எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரமென்பன படலம் எனப் படும்' என்பது காண்க. -

படலமென்றே இலக்கண நூற் பிரிவுகள் வழங்கு தலைப் பன்னிரு படலம் என்னும் புறப்பொருள் இலக் கண நூற்பெயரும், புறப்பொருள் வெண்பா மாலை, வீர சோழியம், பிரயோக விவேகம் என்னும் இலக்கணங்களி லுள்ள உறுப்புக்களின் பெயர்களும் புலப்படுத்தும். இங்ங்ணம் இலக்கணங்களின் உறுப்புக்களுக்கு உரியன வாக இருந்த பெயர் காப்பியங்களின் உறுப்புகளுக்கும் கொள்ளப்பட்டது. இதனை நினைந்தே சங்கர நமச் சிவாயர் நன்னூல் உரையில்,

"படல உறுப்பினை புடைய காப்பியங்களுள் பாட் டுடைத் தலைவனது சரிதையே அன்றி மலை கடல் நாடு முதலிய பல பொருட்டிறங்களும் விரவி வருத லும் பல பொருளை உணர்த்தும் பொதுச் சொற்கள் ஒரே வழி யன்றித் தொடர்ந்து வருதலும் காண்க' என்று உரைத்தார். இப்பொழுது உள்ள தொடர்நிலைச் செய்யுட்களில் படல உறுப்புக்களையுடையனவே பெரும் பெரும்பாலனவாம்.

காண்டத்தையன்றி, வடமொழி முதல் நூல்களைப் பின்பற்றிப் பாகவதத்தில் அமைந்துள்ள கந்தங்களும், பாரதத்தில் உள்ள பருவங்களும் பேருறுப்புக்களாம்.

இனி, காப்பியம் நுதலும் பொருளைப்பற்றிக் கவனிக் கலாம். அவற்றை நான்கு பகுதிகளாக வகுக்கலாம்.

1. தொல். செய்யுள், 172, பேர். 2. நன்னூல், சங்கர கமச்சிவாயர் உரை, 8-ஆம் பதிப்பு, ப. 17.