பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/164

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 தமிழ்க் காப்பியங்கள்

எண்ணிய வன்ன&னகள் ஈரொன் பதுமறியக் கண்ணிய மிக்கபெருங் காப்பியமும்.'

மாறனலங்கார உரையாசிரியர் ஓரிடத்தில் இங்ங் னமே உணர்த்துகின்ருர்;'அறம் முதலிய நாற்பொருளும், மலே கடல் நாடு முதலிய பதினெட்டு வருணனையும் ஒழிந்தன வும் குறைவின்றி உணர்த்தப்படுவன வாகும் பெருங் காப்பியம்' என்பது காண்க. இப்பதினெட்டுக்கும் வகை வருமாறு : -

(1) மலை, (2) கடல், (3) நாடு, (4) நகர் (5.1.0) சிறு

பொழுது ஆறு, (11-16) பெரும்பொழுது ஆறு, (17) சந் திரோதயம், (18) சூரியோதயம். --

இவற்ருேடு மாறனலங்கார ஆசிரியர், மேக வருணனை என்பவற்றையும் சேர்த்துக் கூறுவர்.

பெருங் காப்பியத்துக்குரிய இவ் வருணனைகள் ஏனைத் தொடர்நிலைச் செய்யுட்களுக்கும் உரியனவே யாம். ஆதலின் இவ்வருணனைகளைப் புராணக் காப்பியங் களிலும் காணலாம். இவற்றை யன்றி வேறுபல வருணனைகளையும் கூறுவது உண்டு. அவற்றை "இணையன என்பதல்ை கொள்ளவேண்டும். ஆற்று வருணனை, தீர்த்த வருணனை, சந்திரன் அஸ்தமனம், சூரியன் அஸ்தமனம் முதலியன அந்தப் பதினெட்டில் அடங்காதவை ஆகும். -

இவ் வருணனைகள் அனைத்தும் காப்பியங்களில் வர வேண்டும் என்ற நியதி இல்லை. இவற்றுள் சில குறைந்து வருதலும் உண்டு; இதனை,

1. தமிழ் விடுது து, 52.53, 2. மாறனலங்காரம், உதாரணம். 191, உரை.