பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/165

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காப்பிய இலக்கணங்கள் 147

'கூறிய உறுப்பிற் சிலகுறைந் தியலினும்

வேறுபா டின்றென விளம்பினர் புலவர்' என்னும் சூத்திரம் உணர்த்துகின்றது. இவ்வருணனை களிலும் சில சிறப்பாக அமைந்திருக்கும்.

பிற்காலத்துப் புராணங்க்ள் சிலவற்றில் திருமலைச் சருக்கம் என்று தனியே மலையைப்பற்றி வருணிக்கும் பகுதி உள்ளது. கடல் வருணனை கம்பராமாயணத்தி லுள்ள கடல் தாவு படலம், கடல் காண் படலம் என்ப வற்றில் உள்ளது. நாடு, நகரம் என்னும் இரண்டையும் பற்றிச் சிலப்பதிகாரம் மணிமேகலை பெருங்கதை யென்னும் நூல்கள் தனியாக வரையறுத்துப் புனையா விடினும், இடையிடையே அமைந்த செய்திகளோடு சார்த்தி நாடு நகரச் சிறப்புக்கள் காட்டப்படுகின்றன. சீவக சிந்தாமணியில் முதல் இலம்பகத்தின் தொடக்கத் தில் நாட்டையும் பின்பு நகரத்தையும் வருணித்துப் பின்பு கதையைத் தொடங்குகின்ருர், திருத்தக்கதேவர். சூளாமணியில் தனியாகவே நாட்டுச் சருக்கமும் நகரச் சருக்கமும் உள்ளன. அதன் பின்பு இயற்றப்பட்ட காப்பியங்கள் பெரும்பாலனவற்றில் இவ் விரண்டு வருணனைகளும் தனித்தனி உறுப்பாக அமைந்து விட்டன. -

நாட்டுச் சிறப்பு நகரச் சிறப்பு காப்பியத்தில் முதலில் நாட்டுச் சிறப்பு நகரச் சிறப்புக் கூறுவது இன்றியமையாததென்ற கொள்கை கவிகள் உள்ளத்தில் தோன்றி வளரலாயிற்று. நீலகேசி யில் முதலாவது தருமவுரைச் சருக்கத்தில் முதலில் நாட்டுச் சிறப்பும் நகரச் சிறப்பும் கூறப்படுகின்றன. நாட் டுச் சிறப்பைக் கூறத் தொடங்கு முன் அந் நூலாசிரியர்,


-------سمب-------ہم ------------------