பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/166

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 தமிழ்க் காப்பியங்கள்

"வாடா வளத்தான் மலர்ஞாலம் மதிப்பின் மிக்க

நாடாவ திஃதாம் அதன் நன்னலம் சொன்ன லத்தாற். கூடாதெனினும் சில கூறலும் வேண்டு மன்றே பாடா விருந்தார் பரிவஞ்சும் படிய தன்றே',

என்று கூறுகின்ருர் என்னல் சொல்லுதற்கு இயலா தென்ருலும் சொல்லவேண்டி யிருக்கிறதே என்னும் பொருள்பட அவர் கூறுவதில், நாட்டுச் சிறப்புக் கூறுதல் அவசியமென்னும் அவர் கருத்துப் புலப்படுகின்றது.

ஒருவருடைய வரலாருக இல்லாமல் பலருடைய வர லாருக உள் அ பெரிய புராணத்தை இயற்றிய சேக்கிழார் தம் நூலுக்கு எந்த நாட்டின் சிறப்பைக் கூறுவது? காப்பியத்துக்கு முதலில் நாட்டுச் சிறப்பு நகரச் சிறப்பு அமைக்கவேண்டும் என்பது அவர் காலத்தில் மரபாகி விட்டது. பெரிய புராணத்துக்கு முதல் நூலாகிய சுந்தர மூர்த்தி நாயனர் அருளிய திருத்தொண்டத் தொகை திரு வாரூர்த் திருக்கோயிலில் உள்ள தேவாசிரயன் என்னும் மண்டபத்தில் உள்ள நாயன்மார்களைப் பாடியது. அத் திருவாரூர் சோழ நாட்டில் உள்ளது. ஆதலின, சோழ நாட்டிலுள்ள திருவாரூரில் இருக்கும் தேவாசிரய மண்டபத்தில் அமர்ந்த அடியார்களைத் திருத்தொண்டத் தொகையில் சுந்தரமூர்த்தி நாயனர் பாடிய முறைப்படி நான் உரைக்கப் புகுகின்றேன்' என்று தோற்றுவாய் செய்வதற்கு ஏற்ற நிலைக்களன்ை முன்பு அமைக்கின்ருர். அதன்பின் முறையாகத் திருத்தொண்டிர் வரலாற்றை உரைக்கத் தொடங்குகின்ருர். சுந்தரமூர்த்தி நாயன ருடைய வரலாற்றினிடையே உபாக்கியானங்களாக (கிளைக் கதைகளாக) நாயன்மார் வரலாறுகளை அமைத்திருக்கிருர் சேக்கிழார். - -

1. நீலகேசி, 11.