பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/167

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காப்பிய இலக்கணங்கள் 149

சுந்தரமூர்த்தி நாயனரது பழைய வரலாற்றைத் திரு மலைச் சருக்கம் முதலிற் கூறுகின்றது. அச் சருக்கத்தின் இறுதிப் பாட்டில்,

"உலகம் உய்யவும் சைவம்நின் ருேங்கவும்

அலகில் சீர் நம்பி ஆரூரர் பாடிய நிலவு தொண்டர்தம் கூட்டம் நிறைந்துறை குலவு தண்புனல் நாட்டணி கூறுவாம்” என்று நாட்டுச் சிறப்புக்குத் தோற்றுவாய் செய்கின்ருர்,

இப்படியே நாட்டுச் சிறப்பைக் கூறிய பின், "சொன்ன நாட்டிடைத் தொன்மையின் மிக்கது

மன்னு மாமல ராள்வழி பட்டது வன்னி யாறு மதிபொதி செஞ்சடைச் சென்னி யார்திரு வாரூர்த் திருநகர்' என்று தொடங்கித் திருவாரூர் நகரச் சிறப்பைப் புனைகின்றர், அதற்குச் சிறப்புக் கூறும் நோக்கத்தால் மனுச் சோழன் சரிதையை விளக்குகிருர். இங்ங்னம் காப்பியத்துக்குரிய உறுப்புக்கள் இரண்டு அமை கின்றன. திருவாரூர் நகரத்தை வருணிக்கும் பகுதி, "திருநகரச் சிறப்பு என்று சில பதிப்புக்களிலும், திருவாரூர்ச் சிறப்பு என்று சிலவற்றிலும், மனு நீதி கண்ட புராணம் என்று சிலவற்றிலும் உள்ளன. மனு நீதி கண்ட வரலாறு திருவாரூர்ச் சிறப்புக்கு உபகாரப் படுவதேயன்றித் தனித்தலைமை உடையதன்று ஆத லின், காப்பிய உறுப்பாகிய வருனனையாக உள்ள அது திரு நகரச் சிறப்பு அல்லது திருவாரூர்ச் சிறப்டொன்ற பெயரோடு இருத்தலே பொருந்தும்.

இங்ங்னம் ஒன்றைேடு ஒன்று இசையுற நகரச். சிறப்பு வரையிற் கூறிய சேக்கிழார், 1. பெரிய புராணம், திருமலைச். 40.

2. டிே திருககரச் சிறப்பு, . * 3 *