பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/170

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152 தமிழ்க் காப்பியங்கள்

நகரத்தையும் பாடிக் காப்பிய உறுப்புக்களை நிறைவுறுத் தினர்.' -

வில்லிபுத்தூரர் இயற்றிய பாரதத்தில் நாட்டுச் சிறப்பும் நகரச் சிறப்பும் தனியாக முன்னர்க் கூறப்பட வில்லை; அந்நூலுக்குச் சிறப்புப் பாயிரம் கூறவந்த வரந் தருவார் பத்துப் பாட்டுக்களில் நடுநாட்டை வருணிக் கின்ருர். அந்த வருணனையைப் படிக்கும்போது ஏதோ காப்பியத்துக்குரிய நாட்டுச் சிறப்பைப் படிப்பது போன்ற எண்ணம் உண்டாகின்றது. 14-ஆம் பாடலில் தான், ஓ, இது சிறப்புப்பாயிரம்' என்ற நினைவு உண்டாகின்றது. பாரதத்தின் முதலில் நாட்டுச் சிறப்பும் நகரச் சிறப்பும் அமையாததைக் குறைவாகக் கருதி, "நம்மால் இயன்றதை நாம் செய்வோம்” என்று எண்ணி நடுநாட்டை வருணித்தார் போலும்! அவ்வளவு பெரிய பாரதக் கதைக்கு நாட்டுச் சிறப்பு இல்லாதிருக்க, பாரதம் இயற்றிய வரலாற்றைக் கூறும் கதைக்குப் பத்துச் செய்யுட்களால் நாட்டுச் சிறப்பு அமைந்திருக் கின்றமைக்குத் தக்க காரணம் வேறு ஏதும் தோற்ற

நாட்டுச் சிறப்பு, நகரச் சிறப்பு என்னும் உறுப்புக்

களுக்கு நாளடைவிற் பெருமை மிகுதியாயிற்று. தல

புராண காப்பியங்களுக்குள்ளே பழையனவற்றில் நாடு நகரச் சிறப்புக்கள் இரா. பிற்காலத்தில் புராணங்களை இயற்றவந்த் புலவர் பெருமக்கள் அவ் விரண்டையும் மிக விரிவாக அமைத்தனர். இந்த வகையில் சிறந்தவர்

1. எல்லாத் தலக்கக்கும் பொதுவாகிய கடவுளின் திருவிகளயாடல் க்கப் புகு கால் தமக்கு விருப்பமான தலத்தோடு சார்த்திச் லவர் வழக்கு; இதனே, சிவபிரான் திருவிகளயாடலப் பே, வலக:1 விளக்க வக்த சங்கர விலாஸம்" என்னும் நாம்

.ெ கவி ைகே. வில் இறைவன் தி காமத்தோடு சாத்தப்படு

? : * : ,