பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/171

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காப்பிய இலக்கணங்கள் 153

கள் கவி வீரராகவ முதலியார், சிவஞான முனிவர், கச்சி யப்ப முனிவர், மீனட்சிசுந்தரம் பிள்ளை முதலிய பலர். மீளுட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் செய்த புராண முடைய பல தலங்களுக்குப் பழைய புராணங்கள் இருக்கின்றன. ஆயினும் நாடு நகரச் சிறப்பு முதலிய உறுப்புக்களோடு இல்லாததைக் குறைவாகக் கருதிய அன்பர்கள் பலர் வேண்டுகோளால் அவை மிக விரிவாக அமையும்படி அப் புராணங்கள் இயற்றப்பட்டன."

ஐந்திணை வளம்

காட்டை வருணிக்கையில் அதனைத் தமிழ் முறைப் படி ஐவகை நிலங்களாகப் பகுத்து அவற்றிற்குரிய கருப் பொருளின் வருணனைகளும் அமையக் கூறுதல் பிற் காலத்துக் காப்பிய ஆசிரியர் மரபு. பெருங்கதையில் நரு மதை கடந்தது என்னும் உறுப்பில் இவ் வைந்திணை வருணனையும் வந்தன. ஐந்திணைக்குரிய முதல் கரு உரிப் பொருள்கள் சிலப்பதிகாரத்தில் அங்கங்கே அமைந்திருப் பதை அடியார்க்கு நல்லார் எடுத்துக் காட்டுகின்றர். கோதாவரியின் இலக்கணங் கூறவந்த கவிச் சக்கர வர்த்தியாகிய கம்பர் சிலேடை வகையால் சான்ருேர் கவிக்கும் இலக்கணம் கூறுவாராகி,

1. இவருடைய நூல்களிற் பெரும்பான்மையானவை புராணங் களே. இவருடைய வாக்கால் தங்கள் தங்கள் ஊருக்கு ஒரு புராண மேனும் ஒரு பிரபந்தமேனும் பெற வேண்டுமென் அக்காலத்தில் சிவ ஸ்தலங்களில் இருந்தவர்கள் விரும்பினர்கள். பழைய புராணம் இருக் தாலும், காட்டுச் சிறப்பு, நகரச் சிறப்பு முதலிய காப்பிய இலக்கண அமைதியுடன் செய்ய வேண்டுமேன் லும் கருத்தால் பலர் இவரை மீண்டும் ஒரு புராணம் இயற்றித் தரும்படி வற்புறுத்தி வேண்டுவதுண்டு. இவர் புராணங்கள் இயற்றிய தலங்களில் பெரும்பான்மையானவற்றிற். குப் பழைய புராணங்கள் உண்டு. '-டாக்டர் உ. வே. சாம்காலதப் rவர்கள், பரீ மீ ஆட்சிசுத் தரம் பிள்ளையவர்கள் சரித்தி, ம். முதல் பாகம், ப. 279. - -