பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/177

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காப்பிய இலக்கணங்கள் 159

அயர்ந்தும் இன்புறுதல் முறையாக வைக்கப்பட்டிருத்தல் அறிதற்குரியது.

கம்பர் தாம் இயற்றிய இராமாயணத்தில் பூம்பொழில் நுகர்தல் முதலிய செய்திகளைக் கூறும் வரைக் காட்சிப் படலம், பூக் கொய்படலம், நீர் விளையாட்டுப் படலம், உண்டாட்டுப் படலம் என்பவற்றைப் பால காண்டத்தில் வைத்தார். காப்பிய நாயகனுகிய இராமனது திருமணத் தைக் கூறும் வரலாறு பின்னே வருகிறது. இராமனும் சீதையும் மேலே சொன்ன வகையான விளையாடல்களில் ஈடுபட்டதாகக் கூறக் கம்பருக்கு மனம் இல்லை. கதை யின் ஒட்டமும் அதற்கு இடம் கொடுக்காது. ஆயினும் காப்பியங்களில் இத்தகைய நிகழ்ச்சிகளைச் சொல்லும் சம்பிரதாயம் வந்துவிட்ட காலம் அது. அதல்ை அயோத்தியிலிருந்து மிதிலைக்குச் செல்லும் மக்களின் விளையாடல்களாக அவற்றை அமைத்தார். கதைப் போக்குக்கும் அவற்றிற்கும் நேர் முகமான தொடர்பு ஏதும் இல்லை. தன் திருமகனுடைய திருமணத்துக்குத் தசரதன் ஆர்வத்தோடு செல்லுமிடையில் வரும் இந்த நிகழ்ச்சிகள் காப்பியகதிக்கு ஒரு வகையான மந்தத்தை உண்டாக்குகின்றன. ஆயினும் சம்பிரதாயத்தை ஒட்டிக் கம்பர் இவற்றை அமைக்கவேண்டியது இன்றியமையாத தாகிவிட்டது. இச் செய்திகளை வேறு எந்த இடத்தில் அமைத்தாலும் பொருத்தமின்றி யிருக்குமாதலின், கம்பர் இவ்விடத்தில் வைத்தார். காப்பியத்தில் இன்ன வகைச் செய்திகள் வரவேண்டும் என்ற மரபை எவ்வாறேனும் பின்பற்ற வேண்டும் என்ற விருப்பத்தால் அவர் இவ்வாறு செய்தா ரென்றே தோன்றுகிறது.

5. புதல்வரைப் பெறுதல் : இன்பம் துய்த்த காதலர் அதன் பயனுக நன்மக்களைப் பெறுதலைக் கூறுதல்;