பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/178

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160 தமிழ்க் காப்பியங்கள்

இது காப்பியத்தின் கதைக்கும் தொடர்புடையது. மனை வாழ்க்கைக்கு நன்கலமாகிய மக்கட் பேற்றை இன்பத். தின் பயனுகவும், அறத்தின் கருவியாகவும் கொள்ளலாம்.

6. கலவியிற் புலத்தல் : அகப்பொருள் நூல்களிற் கற்புக் காலத்தில் சொல்லப்படும் ஊடல், காப்பியங் களிலும் சொல்லப்படுகின்றது. புலவி கலவியின் இன்பத்தை மிகுதிப்படுத்தலின் இதனை அகப் பொருளில் கற்பிற்குச் சிறந்த நிகழ்ச்சியாக வைத்தனர். அதனையே காப்பியக் கவிகளும் பின்பற்றி அமைப்பர்.

7. புலவியிற் களித்தல்: ஊடிய மகளிரைத் தலைவர் தெளித்த பின் அவ்வூடல் நீங்க இருவரும் களித்தல். ஊடலின் பின் நிகழும் கூடல் மிகச் சிறந்ததென்பர்.

அரசியற் செய்திகள்

காட்டு வருணனையில் பொதுவாக அரசன் கோல் கோடாது அரசு புரிதலைக் கூறுதல் புலவர் வழக்கம். அங்கே கூறுவதை யன்றிக் கதைப்போக்கிலே போர் நிகழ்ச்சியைச் சொல்லும் காலத்திலும் அரசியற் செய்தி களை அமைப்பர். அவற்றுள் பின்னே வருவன அடங்கும்.

1. முடி கவித்தல் : தமிழ்க் காப்பியங்களில் பெரும் பான்மையான நூல்களில் அரசர்களே தலைவராக உள்ளனர். அவர்கள் முடி புனைதலைக் கதைக்கு ஏற்றபடி புலவர் அமைப்பர். #

2. மந்திரம் : அரசன் மந்திரிகளோடு ஆராய்தல். தசரதர் மந்திரிகளோடு ஆராய்வதை ஒரு படலத்தாலும் இராவணன் ஆராய்வதனை ஒரு படலத்தாலும் கம்பர் விரிக்கின்ருர், .