பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/180

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162 தமிழ்க் காப்பியங்கள்

"மந்திரந்து தொற்ருடல் வாய்ந்த நிரைகோடல்

புந்தியுறச் சேறல் புறத்திறுத்தல்-வெந்திறல்கூர் மிக்கவிகல் வென்றி நிலையாமை யைமிகுத்தல் கைக்கிளைகள் கூறுங் கடன்'

என்று புறத்திணைக்குரிய செய்திகள் அனைத்தையும் தனியே ஒரு பாட்டிற் குறித்தார். இதனை உரையாசிரியர் விளங்க வைக்கின்ருர்;

"வாய்ந்த நிரைகோடல் என்பது முதலாகக் கைக் கிளைகள் கூறும் கடன் என்பதல்ை வெட்சி முதற் பாடாண்டினை பீருகப் புறம், புறப் புறம், அகப் புறம் என்னும் மூன்று கூருய எழுதினையும் முறையே கூறியவாறும் காண்க என்பது அவர் உரை.

சுவையும் பாவமும் 'நெருங்கிய சுவையும் பாவமும் விரும்பக்

கற்ருேt புனையும் பெற்றிய தென்ப" - என்பது மேற்காட்டிய தண்டியலங்காரசூத்திரத்தின் இறு திப் பகுதி. எட்டு வகைப்பட்ட சுவையும் மெய்ப்பாட்டுக் குறிப்பும் இடைவிடாமல் கேட்போர் மதிக்க இவ்வகைத் தாகப் புலவரால் புனையப்படும் தன்மையை உடைத் தென்பர் ஆசிரியர்' என்பது அதன் உரை. இச் சுவை இவ் வலங்கார நூலில் தனியே சுவையணி யென்னும் தலைப்பின்கீழ் விரிவாகச் சொல்லப்படுகின்றது: . "உண்ணிகழ் தன்மை புறம்பொழிந்தோங்க எண்மெய்ப் பாட்டின் இயல்வது சுவையே” "அவைதாம்,

1. மாறன். 75.