பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/181

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காப்பிய இலக்கணங்கள் 163

வீரம் அச்சம் இழிப்பொடு வியப்பே

காமம் அவலம் உருத்திரம் நகையே'

என்பன சுவையின் இலக்கணம் உணர்த்தும் சூத் திரங்கள். சுவைபற்றிய செய்திகள் முன்னரே ஆராயப்

- د L-68T سL لي}

இதுகாறும் ஆராய்ந்த தண்டியலங்கார இலக்கணத் தினுல் காப்பியங்களைப்பற்றி அறிந்துகொண்ட செய்தி களாவன :

1. ஒரு கதையைக் கூறவேண்டும். 2 அறம் பொருள் இன்பம் வீடுகளை இலக்காகக் கொள்ளவேண்டும்.

3. பதினெட்டு வருணனைகள் அமையவேண்டும். 4. இன்பச் செய்திகளும், புறப்பொருட் செய்தி களும் விரவி வரவேண்டும்.

5. மெய்ப்பாடுகள் வெளிப்பட வேண்டும்.

இவையே முக்கியமான இலக்கணங்களாம்.

காப்பியத்தின் யாப்பு காப்பியங்களின் யாப்பைப்பற்றிய இலக்கணம் ஒரு சூத்திரத்தில் வருகின்றது:

"அவைதாம், - .

ஒருதிறப்பாட்டினும் பலதிறப் பாட்டினும் உரையும் பாடையும் விரவியும் வருமே' என்பது அது.

மேற்கூறிய பெருங்காப்பியமும், காப்பியமும் ஒரு வகைச் செய்யுளானும், பலவகைச் செய்யுளானும், உரை விரவியும், பாடை விரவியும் வருத லுடைய’ என்பதும், "ஈண்டுச் செய்யுள் என்பது பாவும் இனமும் நோக்கியது.

1. தண்டி. சூ. 68, 69. Tడె GTT