பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/182

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

{64 தமிழ்க் காப்பியங்கள்

விரவியும் வரும் என்ற உம்மையான், விரவாது செய் வுளான் வருவதே சிறப்புடையதெனக் கொள்க’ என்பதும் அச் சூத்திரத்தின் உரையிற் காணப்படுவன.

ஒருதிறப் பாட்டான் வந்த காப்பியங்களாவன : மணிமேகலை, பெருங்கதை என்பனவாம். பலதிறப் பாட்டான் வந்தவை சீவக சிந்தாமணி, சூளாமணி, கம்ப ராமாயணம் முதலியனவாம்.

உரையும் பாடையும் விரவி வந்தது சிலப்பதிகாரம். *உரை-உரை நடை: பாடை-திசைச் சொல்' என்பர் மாறனலங்கார உரையாசிரியர். வடமொழியினின்றும் வழுவிய பிராகிருத மொழிகளையும் பாஷை யென்னும் பெயரால் வழங்குதல் வடநூல் மரபு. அதனை ஒப்பத் தமிழிலே உள்ள சேரி மொழியையும் பாடையென்னும் பிரிவில் அமைத்துக்கொள்வதில் இழுக்கொன்றும் இல்லை. பிற்காலத்துப் பாரத வெண்பாவில் இடை யிடையே உரை விரவி வந்துள்ளது. இவற்றை வட மொழியிற் சம்பு என்பர். -

சிலப்பதிகாரத்தில் உரைபெறு கட்டுரைக்கு உரை யிட்ட அடியார்க்கு நல்லார், "க்ாப்பியங்கட்குச் சிறு பான்மை இவ் வுறுப்புக்களும் சில வருமெனக் கொள்க" என்ருர். இவ் வுறுப்பென்று சுட்டியது, கட்டுரைச் செய்யுளை. - *

தொடர்நிலைச் செய்யுட்களைச் சேர்ந்த புராணங்கள் பெரும்பாலும் விருத்த யாப்பில் இயற்றப்பட்டுள்ளன: இதனை நினைவுகொண்ட யாப்பருங்கல விருத்தியாசிரியர் விருத்தமென்னும் பாவினப் பெயர்க் காரணம் கூறும் பொழுது, 'புராணம் முதலாகிய விருத்தம் உரைத்த லானும் விருத்தமென்பது உம் காரணக் குறி” என்ருர்.

1. மாறன், ப. 78. 79. 2. சிலப். ப. 32. 3. பா. வி. கு. 58. உரை.