பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/183

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காப்பிய இலக்கணங்கள் 165

விருத்தம்-வரலாறு. க்ம்பர் விருத்தக் கவித்திறம்" என்று இராமாயணத்தை ஒருவர் பாராட்டுதலைக் கருதுக.

வீரசோழிய உரையாசிரியர் ஒரிடத்தில், இனிக் கோவைக் கலித்துறையென்றும் காப்பியக் கலித்துறை யென்றும் இரண்டாக்குவாரெனக் கொள்க’ என்ருர். கோவைக் கலித்துறையென்றது கோவை நூல்களில் உள்ள கட்டளைக் கலித்துறையை; காப்பியக் கலித்துறை என்றது சீவகசிந்தாமணி முதலிய நூல்களில் பயின்று வரும் கலித்துறைச் செய்யுட்களை. காப்பியக் கலித்துறை என்னும் பிரிவு ஒன்று தனியே உண்டாதற்கு ஏதேனும் தக்க காரணம் இருத்தல் வேண்டும். அத்தகைய கலித் துறை ஏதேனும் காப்பியத்துள் முதல்முதலாக ஆளப் பட்டிருத்தல் கூடும். அப்படியாயின் அதற்கு வேறு பெயர் அமைத்தல் இயலாதாகக் காப்பியக் கலித்துறை என்றே வழங்கினர் என்று கொள்ளுதல் தகும். இல்லை எனின், பல காப்பியங்கள் இக் கலித்துறையில் அமைந் திருந்தமையின் பெரும்பான்மைபற்றி இப் பெயர் வந்தது என்று ஊகித்தலும் இயல்புடையதே.

காப்பியக் கலித்துறையை விருத்தக் கலித்துறை என்றும் சொல்வதுண்டு. விருத்தமென்பதும் வரலாற் றைத் தழுவிய காப்பியத்தைக் குறிப்பதென்றே கொள்ளலாம். எனவே, காப்பியக் கலித்துறை விருத்தக் கலித்துறை என்ற இரண்டும் ஒரு பொருள் தொடர்கள்.

பன்னிரு பாட்டியல் கூறுவன தொடர்நிலைச் செய்யுள் என்னும் தலைப்பில் பன்னிரு பாட்டியலில் நான்கு சூத்திரங்கள் உள்ளன.

عيومصاصيصنع سيعينه يص

1. திருவிளை. மாயப்பசுவை. 29. 2. விர. ப. 165.