பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/184

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166 தமிழ்க் காப்பியங்கள்

அதில் உள்ள வித்து, துளி, கொடி என்னும் மூன்றும் கதைத்தொடர்ச்சியாகலாம் என்பது முன்னர் ஆராயப் பட்டது. தொடர்நிலைச் செய்யுள் வெண்பா, விருத்தம், அகவல், கொச்சகக்கலி, உரையிடை யிட்ட செய்யுள் என்னும் யாப்பால் நடைபெறும். அவற்றுள் கூறப் பட்ட தலைவன் மூவகைப்படுவான். வடமொழியில் போஜராஜன் இயற்றிய சரஸ்வதி கண்டாபரணம் என்ற நூலிலும் பிறவற்றிலும் தலைவர்களைத் தீரோ தாத்தன், தீரோத்ததன், தீரசாந்தன், தீர லலிதன் என நால்வகை ஆக்குவர்.

பின்னும் பன்னிரு பாட்டியல், தொடர்நிலைச் செய்யுள் தலை இடை கடை என மூவகைப்படும் என்று கூறும். அவற்றுள் தலையாய காப்பியத்திற்கு உரிய தொரு சூத்திரம்மட்டும் காணப்படுகிறது. ஏனையவுை கிடைக்கவில்லை. அறம் பொருள் இன்பம் வீடு என்னும் தான்கனையும் கூறி, வென்றி முதலியவற்றைச் சந்தி போல அமைத்து விளக்குவன தலையாய தொடர்நிலைச் செய்யுள் ஆகும். இது தண்டியாசிரியர் கூறும் பெருங் காப்பியமேயாம். இவ் விலக்கணங்களை வரையறுக்கும் பன்னிரு பாட்டியல் சூத்திரங்கள் வருமாறு :

"வித்தெண் துளிகொடி தலைவைெடு மேவி

ஒத்த வெள்ளை விருத்தம் அகவல் வைத்த ஒருதொடை கொச்சக உறுப்பு நடைபெற வருவது தொடர்நிலை என்ப.” 'வித்தே எண்துளி விருந்தியல் கொடி.என ஒத்த மூவகை இறைவளுெடு பொருந்தி ஒழுகிய வெள்ளை விருத்தம் அகவல் உரையொடு மிடைந்த பாட்டுடைக் கொச்சகம் நடைபெற வருவது தொடர்நில வகையே."

1. History of Sayselerit Poetics, Vol. II. Б. 339, J. O. R. M. vol. XI p. 90. 2. சூ. 347. 3. சூ. 348.