பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/186

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168 தமிழ்க் காப்பியங்கள்

அதில் மேற்கோளாக வரும் செய்யுள் ஒன்ருல் காப்பியம் இயற்றுவதன் அருமையை உணரலாம். அது வருமாறு :

"முற்ற உணர்த்து முதுகாப் பியம்புணர்ப்பான்

.உற்றவர்தங் கண் போன் றுறங்காவாம்-இம்பிரிந்தால் நல்லியலார் வந்தனசெய் தாவீறன் மால்வரைமேல் மெல்லியலார் இன்ப விழி.' -

இ . ள். நெஞ்சமே, நன்புலவர் அஞ்சலி செய்யும் நாவீறுடைய பிரான் வண் குருகூரினிடத்து மெல்லிய சாயலையுடையார் இன்ப விழியானது, இனி நாம் இவரை இல்லின்கண் வைத்துப் பிரிவோ மாகில், அறம் முதலிய நாற்பொருளும் மலைகடல் நாடு முதலிய பதினெட்டு வருணனையும் ஒழிந்தனவும் குறை வின்றி உணர்த்தப்படுவனவாகும் பெருங்காப்பியம் பாடு தற்கு உட்கொண்ட புலவர் கண்போலத் துயிலொழிந்த தோடும் துன்ப விழியாம் என்றவாறு.'

இதல்ை காப்பியம் செய்யும் கவிஞர் பல கால்

சிந்தித்துச் சிந்தித்துத் தம் நூலை அமைப்பரென்பது புலனுகின்றது. -

வச்சணந்தி மாலையில் கண்டவை

வச்சணந்தி மாலையிற் கண்ட காப்பிய இலக்கணங்

களும் தண்டியலங்காரத்தை அடியொற்றியனவாகவே உள்ளன. புராணத்தைப்பற்றிய செய்தி ஒன்றையும்

1. மாறன். உதாரணம் 191.