பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/189

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காப்பிய இலக்கணங்கள் 17.

காப்பியமும் இலக்கண வரம்பும்

காப்பியமாகிய அகலக் கவி செய்வார் தமிழ் மரபை நினைந்து கவி இயற்றினும், பொருள் போன வழியே சொல் போக வேண்டுமாதலின் அவர் சில இடத்துப் பழைய இலக்கணங்களையும் கடந்து செல்ல நேரும். அப்பொழுது அவர் வழங்கிய வழக்கே இலக்கிய மாதலின் அதில் காணப்பட்ட அமைப்பே இலக்கண மாகிவிடும். இலக்கண நூல்களில் எல்லா இலக்கணங் களையும் வரையறுத்தல் சாத்தியம் அன்று. காலந் தோறும் கவிஞருடைய கருத்துக்கள் வேறுபடுவதால் இலக்கியமும் வேறுபடும். அதற்கேற்ப இலக்கணமும் வேறுபடும்; விரிவும் அடையும். -

கவிஞர் இலக்கிய வாயிலாகப் புலப்படுத்துவன வற்றைச் செய்யுள் வழக்கு, சான்ருேர் மரபு, கவிஸ்மய மெனப் பலவாருக வழங்குவர்.

பெருங் கவிஞர் காப்பியத்தில் ஒரு சொல்லைச் சிதைத்து வழங்கினும், ஒரு சொல்லுக்கு நிகண்டிலே காணப்படாத பொருளை அமைத்துக் கவி இயற்றினும், ஒரு வழக்கத்தை மாற்றி உரைப்பினும் அவை யாவரும் உடம்படுவதற் குரியன ஆகிவிடும். வல்லான் வகுத்ததே வாய்க்கால் அல்லவா? யாப்பருங்கல விருத்தி யாசிரியர்,

"மிக்கும் குறைந்தும் வரினும் ஒருபுடை

ஒப்புமை நோக்கி ஒழிந்தவும் கொளலே' என்னும் சூத்திர உரையில்,"இக்கவியுள் ஐஞ்சீரடியும் வந்: தனவெனக் கொள்க. 'கலியொடு வெண்பா அகவல் கூறிய, அளவடி தன்னல் நடக்குமன் அவையே' என்ற சூத்திரத்தில் அவையென்ற விதப்பிலுைம், இச் சூத்திரத்தாலும் இவற்றையும் குற்றம் இல்லை என்று. - 1. பா. வி. ப. 93. 2. பா. வி. ப. 27.