பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/190

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172 தமிழ்க் காப்பியங்கள்

கொண்டு வழங்குப, புராண கவிஞரால் சொல்லப்பட்டன வாகலின்' என்றும், பிறவும் புராண கவிஞரால் பாடப் பட்டு மிக்கும் குறைந்தும் வருவனவற்றை இவ் விலக்கணத்தான் ஒரு புடை ஒப்புமை நோக்கிப் பெயரிட்டு வழங்கப்படும்' என்றும் கூறும் பகுதிகள் அகலக் கவியாகிய புராணங்களை இயற்றும் ஆசிரியர்கள் இலக்கண வரம்பு கடந்தும் செல்வரென்பதை உணர்த்து கின்றன. கம்பர் போன வழி என்று கம்பரைப்பற்றிக் கூறும் பழமொழியும் இங்கே கருதற்குரியது.

வீரசோழியம் அலங்காரப் படலத்தின் 4-ஆம் கலித் துறை உரையில் உரையாசிரியர், குண்டலகேசியும் உதயணன் கதையும் முதலாக உடையவற்றில் தெரியாத சொல்லும் பொருளும் வந்தன வெனின், அகலக்கவி செய்வானுக்கு அப்படி யல்லது ஆகாதென்பது என்று எழுதுகிருர், அதல்ை காப்பியக் கவிஞர் பிறர் அறியாத சொல்லும் பொருளும் அமைத்தற்கு உரிமை பூண்டவர் என்ற உண்மை புலப்படுகின்றது. அச் சொல்லும் பொருளும் கவிஞனுற் புதியனவாக மேற்கொள்ளப் படுவன ஆதலும் கூடும். வட நூலார் காப்பியத்தைப் பண்டை இதிஹாஸங்களின் வழியே வந்தன வென்றும், உத்பாத்தியம் என்றும் இரண்டு வகையாக்குவர். அவற்றுள் உத்பாத்தியம் என்பது கவிஞற்ை படைத்துக் கொண்ட கதையை உடையதாகும்.

காப்பியம் இயற்றுவார் Qతాriుషిత படைத்து வழங்குவது உண்டு. ஒட்டக்கூத்தர் இயற்றிய தக்க யாகப் பரணிக்கு உரை வகுத்த பெரியார் ஓரிடத்தில்,

1. Jr., 9. L. $47. 2. 349 , وك وه.