பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/194

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5

காப்பிய அலங்காரங்கள்

அலங்கார வகை

காப்பியங்களில் அமையும் அலங்காரங்கள் குண அலங்காரங்கள், பொருள் அலங்காரங்கள், சொல் அலங்காரங்கள் என மூன்று வகைப்படும். அவற்றுள் குண அலங்காரங்களைப் பொது அணிகளென்றும் கூறுவர். வடமொழி நூல்களில் இப் பகுப்பு அமைந் துள்ள முறையைப் பின்பற்றி வீரசோழியம், தண்டியலங். காரம், மாறனலங்காரம், குவலயானந்தம் என்னும் நூல்கள் இலக்கணங்கள் வகுக்கின்றன.

நெறி

குண அலங்காரங்களின் தொகுதியை நெறி அல்லது மார்க்கம் என்ப்ர். தண்டியாசிரியர் செய்யுள் நெறி இரண்டென்பர். அவை வைதருப்பம், கவுடம் என்பன. இந் நெறியை ரீதி என்று வாமனகாரிகை முதலிய வடநூல்கள் கூறும். ரீதியைக் காப்பியங், களுக்கு உயிராகக் கொண்டு அதற்குத் தலைமை கூறுவர் வாமஞ்சாரியர்.

1. வாமனர் : காவ்யாலங்கார சூத்திரம், 3, 1. 12.