பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/195

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காப்பிய அலங்காரங்கள் 177

நெறி என்பது, சொல்லும் பொருளும் நோக்கிய தொரு வரையறை. அது செய்யுள் நடையென்று இக் காலத்தார் குறிப்பது போன்றது. வீரசோழியமும் தண்டி யலங்காரமும் வைதருப்பம், கவுடம் என்னும் இரண்டை உரைத்து, வைதருப்பத்தையே சிறந்ததாகக் கருதின. அதற்குரிய குணங்கள் பத்து. -

"மெய்பெறு மரபின் விரித்தசெய் யுட்கு வைதருப்பம்மே கெளடம் என்ருங்கு எய்திய நெறிதாம் இருவகைப் படுமே” என்பது தண்டியலங்கார சூத்திரம்.

மாறனல்ங்காரத்தார் மூன்று நெறி கொண்டனர். அவை வைதருப்பம், கவுடம், பாஞ்சாலம் என்பன. ரீதிக் குத் தலைமை கூறும் வாமனரும் இம் மூன்றைக் கூறினர். வாமனருடைய காலம் எட்டாம் நூற்ருண்டின் பிற் பகுதியாகும். மாறனலங்கார ஆசிரியர் 16-ஆம் நூற் குண்டினர். ஆதலின், வாமனர் நூலைப் பின்பற்றியே மாறனலங்கார நூலாசிரியர் நெறி மூன்று வகுத்தனர் என்று கொள்ளலாம்.

தமிழ்விடு தூது என்னும் பிரபந்தத்தின் ஆசிரியர் நெறி நான்கு என்றனர்; -

. “நல்ல நெறி, தாலே விதையா" - என்று அவர் கூறுவர். 9-ஆம் நூற்ருண்டில் வாழ்ந் திருந்த ருத்திரடர் என்ற ஆசிரியர்' இயற்றிய வடமொழி அணியிலக்கணத்தில் வைதர்ப்பி, கெளடி, பாஞ்சாலி,

1. சூ. 18. - .

2. Some aspects of Etterary Griticism in Sanskrit, P. 29. 3. கண்ணிகள், 64-65. - 4. Some aspects of Literary criticism in Sanskrit, P. 32.

த. கா-12