பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/197

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காப்பிய அலங்காரங்கள் 179

அவ்வந் நெறியாலே பாடும் கவிகளுக்கு அந் நெறி யினலே பெயர் வழங்கும். ஒட்டக்கூத்தர் கவுடப் புலவர் என்று கூறப்படுதல் இங்கே நினைத்தற்குரியது.

நெறிகள் தொகைநிலைத் தொடரை (சமாஸபதங்கள்) அநுசரித்து அமைவன என்றும், கவுட நெறியில் அதிக மான தொகைநிலைத் தொடர்கள் பயின்று வரும் என்றும் வடமொழியில் ருத்திரடர் கூறினர்.

வைதருப்ப நெறியே யாவராலும் விரும்பி ஏற்றுக் கொள்ளு தற்குரியது. தண்டியாசிரியரும் அதற்குரிய பத்துக் குணங்களையே விரித்துரைத்தார்.

பாகங்கள்'

மாறனலங்கார உரையாசிரியர் நெறியைப் பாகம் என்றும் குறித்தனர். பொருளின்பத்தைச் சொற்களின் அமைப்பினுல் வெளியிடும் நெறியையே பாகம் என்பர். வட நூலாசிரியர்களிற் சிலர் சொற்பாகம், பொருட் பாகம் என இரண்டாக்குவர். சொற்களை மாற்றி வேறு அமைக்க முடியாத நில்ையிலே அமையும் நடையைப் பாக மென்பர் சிலர். நெறி, சொற்பொருளணி, சுவை, யுக்தி முதலியன யாவும் அமைந்து உண்டாகும் அமைப்பே பாகம் என்பர் வேறு சிலர். ரஸத்தை உண்டாக்கு வதற்கு உபகாரப்படுவது என்பர் ஒரு சாரார்.

பாகம் என்பதற்குக் கனிவு, பழுத்தல என்னும் பொருள் கூறலாம். கவி, தான் கருதிய பொருள் பழுத்துப் படிப்போர் உணர்ந்து இனிது நுகரும்படி அமைய

1. மாறன். 78, 79. 2. History qf Sanskrit Poelics, Vol. Il. 500.