பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/198

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

f$0 தமிழ்க் காப்பியங்கள்

ചേങ്ങി. அவ்வமைப்பே பாகமாகும். இதனைப் பொருள் கொள்ளும் முறையின் இனமாகக் கூறலாம்.

பழச்சுவை முதிருங்கால் அம் முதிர்ச்சியைப் பாகம் என்பர் வடநூலார். ஆதலால் செய்யுட் பாகத்திற்கும் பழங்களின் பெயர்களை அமைத்தனர். பெரும்பாலான ஆசிரியர்கள் திராக்ஷாபாகத்தையும் நாளிகேர பாகத்தை தையும் எடுத்துரைக்கின்றனர். திராக்ஷா பாகம், எளிதிற் பொருள் புலப்பட்டு இன்பம் பயப்பது. நாளிகேர பாகம், சிறிது கூர்ந்து உணரின் இன்பம் பயப்பது. வித்தியா நாதர், போஜன் என்பார் இவ் விரண்டையும் உரைத்த னர். ரத்தினேசுவரர் என்னும் உரையாசிரியர் ஸஹகார பாகம், வார்த்தாக பாகம், நீலகபித்த பாகம் என்ப வற்றை உணர்த்துகின்ருர். இவை முறையே மாங்கனி, கத்தரிக்காய், கருவிளங்கனி என்பவற்றை உணர்த்தும். மாங்கணிப் பாகம் தலையாயது; கருவிளங்கனி இடையா யது; கத்தரிக்காய்ப் பாகம் கடையாயது. ராஜசேகர மகா கவி தம்முடைய காவ்யமீமாம்லையில் ஒன்பது பாகங். களைச் சொல்லுகின்ருர். அவை (1) ம்ருத்வீகா பாகம் (முந்திரிக்கனி), (2) ஸஹகாரபாகம் (மாங்கனி), (3) நாளி கேரபாகம் (தேங்காய்), (4) பதர பாகம் (இலந்தைக்கனி), (5) திந்திருணி பாகம் (புளியம் பழம்), (6) த்ரபுஸ் பாகம் (வெள்ளரி), (7) பிசுமந்த பாகம் (வேம்பு), (8) வார்த்தாக பாகம் (கத்தரி), (9) க்ரமுகபாகம் (கமுகு) என்பனவாம்.

கவிச் சுவையைப் பழச் சுவைக்கு ஒப்பிடுதல் தமிழ் மொழிக்குப் புதிதன்று. கடைச்சங்க காலத்துக் கவிஞர் ஒருவர் இனிய பாக்களை இயற்றினமையின் அவரை,

I. Kavya Mimamsa: Gaekwar Oriental Beries No, I, 3rd edn. 薯。181, - -