பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/201

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காப்பிய அலங்காரங்கள் 183

என்பதில் இகூடி-பாகம் குறிக்கப்படுகின்றது. மதுர முடைய பொருள் யாவும் ஒருங்கு வைத்துச் செய்யுட் சுவைக்கு உவமை கூறும் பின்வரும் செய்யுள் இங்கே கருதற்குரியது.

'பிதிருந் தரமற இன்பால் அளவிப் பிழிசுவை மதுவிரவிப் பிறங்கிய புல்ல கண்டநி lஇச்சுவை பெறுங்கண் டுங்கூட்டி எதிரும் பொருளியல் பலாக்கனி மாங்கனி இவைவா ழைக்

கனிமுன் - இயையும் முழுக்கனி முந்திரி கைக்கனி இவ்விர தமும்நாட்டி அதிருங் கடலமிர் தமுமு ளுறுத்தி அவாங்குழல் வீக்ணயிசை அத்தனை யும்புக வைத்துச் சிவமணம் அகலா தேகமழ முதிரும் அருட்கவி பாடிய புலவன்’

என்று மீனுட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் சேக்கிழார் கவியைப் பாராட்டுகின்ருர். இதன்கண் வடநூலார் கூறும் மாங்கனி, முந்திரிகைக் கனி என்பவையும், தமிழ் விடு தூதிற் குறிக்கப்படும் பால், வாழை, அமுது என்பவையும், அவையல்லாத வேறு பிறவும் சொல்லப் பட்டன. இனிய பொருள் யாவும் கவிச் சுவைக்கு உவமையாக்கும் மரபுபற்றி இங்ங்ணம் அமைத்தனர்.

வீரசோழியத்துள் அகப்பொருளுக்கு உறுப்பாக வரும் சட்டகம் முதலாகிய இருபத்தேழனுள் ஒன்ருகிய பொருள் கோள் என்பதை விரித்துக் கூறும் உரை யாசிரியர் அது ஏழு வகைப்படும் என்பர். அவை முறையே வள்ளி, வாழை, கரும்பு, பலா, அசோகு, விற்பூட்டு, புனலாறு என்பன. இப் பெயர்களுள் செய்யுட் பாகங்களுக்குரிய பெயர்கள் சில வந்துள்ளன. இப் பொருள்கோள்கள் நூலுட் பொருள் சிறக்கும்

1. வீரசோழியம், பொருட்படலம், 4, 5, 6.1 2. டிெ ப. 99.