பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/202

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184 தமிழ்க் காப்பியங்கள்

ஆற்றை வகுப்பன. முற்பகுதியில் பொருள் சிறப்பது வள்ளி எனவும், ஈற்றில் பொருள் சிறப்பது வாழை யெனவும், இடையில் பொருள் சிறப்பது கரும்பெனவும் முதலும் இடையும் பொருள் சிறப்பது பலாவெனவும், இடையும் ஈறும் பொருள் சிறப்பது அசோகெனவும், முதலும் ஈறும் பொருள் சிறப்பது விற்பூட்டெனவும், முழுவதும் பொருள் சிறப்பது புனல் யாறெனவும் கூறுவர். இவற்றிற்குரிய இலக்கணச் சூத்திரங்கள் அவ் வுரையாசிரியரால் காட்டப்படுகின்றன. இவை செய்யுட் பாகத்துக்கு இனமென்றே கொள்ளற்கு உரியனவாம். l -

குண அணிகள்

செறிவு, தெளிவு, சமநிலை, இன்பம், ஒழுகிசை, உதாரம், உய்த்தலில் பொருண்மை, காந்தம், வலி, சமாதி ஆகிய பத்துக் குணமும் உயிராக வைதருப்ப நெறி நடைபெறும். வீரசோழிய நூலார் சிலிட்டம், உதாரதை, காந்தி, புலன், சமதை, சமாதி, பொருட் ட்ெளிவு, ஒகம், சுகுமாரதை, இன்பம் எனப் பத்து உரைப்பர். இவ்விரண்டு வகைப் பெயர்களும் ஒரு வகையைக் குறிப்பனவேயாகும். இவற்றுள் காந்தி யென்பது விதர்ப்பருக்கும் கவுடருக்கும் உடம்பாடு. அதனை யாப்பு வனப்பென்று கூறுவர். சுகுமாரதை, இழையெனவும் கூறப்படும். .

இவற்றிற் சிறந்தது இன்பமென்பது. அது மாதுர்ய மென்று சொல்லப்படும். சொல்லின்பம், பொருளின்பம் என அது இருவகையாகும். இக் குணவலங்காரம், 'முன்னைப் பிறப்பினும் கவிப் பொருத்தம் உடையானுக்

1. தண்டியலங்காரம், கு. 14: 2. வீரசோழியம், அலங்காரம், 6.