பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/203

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காப்பிய அலங்காரங்கள் - 185

கல்லாது தெளியாது’ என்பது வீரசோழிய உரை யாசிரியர் கொள்கை." -

சொல்லின்பமாவது, அடை சினை முதலென மூன்றும் தத்தம் முறையிலே மயங்காமல் வரும் வண்ணச் சினைச் சொற்களும், முதலொடு குணம் இரண்டு அடுக்கி வரும் அடைசொற்களும், சினையொடு குணம் இரண்டு அடுக்கி வரும் அடைசொற்களும், வழக்கிடமும் செய் யுளிடமுமாக இரண்டு இறந்தனவாய் அடை பல வேண்டின வழியே புணர்ந்த சொற்களுடன், வழி மோனை முதலியன வரத் தொடுப்பத் தோன்றுவது. பொருளின்பமாவது, மலரிலுள்ள மதுக் காரணமாக மது கரங்களுக்கு வரும் இன்பம் போலக் கவிப் பொருளை உட்கொண்டோர்க்கு வரும் இன்பமாம். சொற்சுவை, பொருட் சுவை என்று கூறுவனவும் இவையேயாம்.

'தவில்தொறும் நூல்நயம் போலும்” என்பதன் உரையில் பரிமேலழகர், நூற்பொருள் கற்குந் தோன்றும் கற்ருர்க்கு இன்பஞ் செய்தலை ஒக்கும் என்று கூறிய இன்பம், பொருள் இன்பமே ஆகும். -

குண அலங்காரங்கள் பத்தினுள்ளும் சமாதி ്rl|കേ சிறந்ததென்றும், அது மூன்று நெறியா ருக்கும் ஒக்கும் என்றும் மாறனலங்கார உரையாசிரியர் கூறுவர். உவமேயத்தின் வினையை உவமைக் கேற்றுவ தாகிய அதனைத் தலைமை உடையதாக்குதற்குக் காரணம். இன்னதென்று தெரியவில்லை. தமிழ்விடு தூதுடையார்,

"முற்றுணர்ந்த தேவர்களும் முக்கணமே பெற்ருt;

குற்றமிலாப் பத்துக் குணம்பெற்ருய்”

என்று இப் பத்துக் குண அலங்காரங்களையும் குறிப்பர்.

1. வீரசோழியம், ப. 205, 2. திருக்குறள் 783, 3, மாறன், ப. 84.