பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/204

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186 தமிழ்க் காப்பியங்கள்

பொருள் அணிகள்

செய்யுட்கு அணி செய்வனவற்றுள் அர்த்தாலங் காரமே சிறப்புடையன ஆகும். அவற்றைக் காப்பியங் களுக்குப் பிராணனகக் கூறுவர் வீரசோழியக்காரர். உயி ரோடு அமைந்த உடலுக்கு அணியணிதல் போலப் பொருட்சுவையையுடைய செய்யுளில் அணிகள் அமைந் துள்ளன. - *

இலக்கியத்தில் அமைந்த அழகுகளைத் தனியே எடுத்து ஆராய்ந்து இலக்கணம் வகுக்கப் புகுந்த ஆசிரி யர்கள் நாளடைவில் இலக்கணத்தைப் பெருக்கிக் கொண்டே வந்தனர். அந்த முறையில் முதலில் சில வாகச் சொல்லப்பட்ட அணிகள் வரவரத் தொகையிற் பெருகின.

தொல்காப்பியம் உவமை அணி ஒன்றனையே கூறியது. பேராசிரியர் எடுத்துக் காட்டும் ஓர் இலக்கணச் சூத்திரத்தில் தன்மை, உவமை, உருவகம், தீவகம், பின் வருநிலை, முன்னவிலக்கு, வேற்றுப் பொருள் வைப்பு, வேற்றுமை என எட்டு அணிகள் சொல்லப்பட்டன. யாப்பருங்கல விருத்தியில் உள்ள, 'உருவக மாதி விரவிய லிரு, வருமலங் காரமும்' என்பதன் உரையில் அதன் உரை யாசிரியர் உருவகம், உவமை, வழிமொழி, மடக்கு, தீபகம், வேற்றுமை நிலை, வெளிப்படை நிலை, நோக்கு, உட்கோள், தொகை மொழி, மிகை மொழி, வார்த்தை, தன்மை, பிறபொருள் வைப்பு, சிறப்பு மொழி, சிலேடை, மறு மொழி, உடனிலைக் கூட்டம், நுவலா நுவற்சி, உயர் மொழி, நிதரிசனம், மாருட்டு, ஒருங்கியன் மொழி, ஐயம், உயர்வு, விரவியல், வாழ்த்து என இருபத்தேழு அணி களைக் கூறி அவை அணியியலுட் கண்டு கொள்க’ என்பர். இதல்ை, -

Ti iராசழியம். அலங்காரம். .