பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/205

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காப்பிய அலங்காரங்கள் - 187

அணி யியலில் இவ் விருபத்தேழும் கூறப்பட்டன

வென்று ஊகிக்க இடமுண்டு. திவாகரத்தில் இருப்த் தெட்டு அணிகள் சொல்லப்பெறுகின்றன.

வீரசோழியக் காவ்யா தரிசத்தைப் பின்பற்றி முப்பத் தைந்து அணிகளைக் கூறினர். அவ்விரண்டு நூலும் ஒரு நூலைப் பின்பற்றியே எழுந்தனவாயினும், ஒரே அலங் காரத்திற்கு வெவ்வேறு பெயர்களைக் கூறுகின்றன. சில பெயர்கள் மாத்திரம் ஒன்றியிருக்கின்றன. வீரசோழி யத்திற் கூறப்பட்ட பெயர்கள் வருமாறு :

1. தன்மை. 2. உவமை. 3. உருவகம். 4. விளக்கு. 5,血L朝。 6. பிற பொருள் வைப்பு. 7. தடை மொழி. 8. விதிரேகம். 9. விபாவனை, 10. சுருக்கு. 11. பெருக்கு. 12. ஈறு.

13. நோக்கம். 14. ஏது. 15. நுணுக்கம். 16. இலேசு.

17. அடைவு.