பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/208

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190 தமிழ்க் காப்பியங்கள்

32. பரிவருத்தன, பரிமாற்றம், மாருட்டு. 33. வாழ்த்து, ஆசி.

34. சங்கீரணம், விரா, விரவியல். 35. பாவிகம்.

வீரசோழிய உரையாசிரியர் கூறும் வேறு பெயர்கள் அணியிய லென்னும் இலக்கண நூலிற் காணப்படுவன வென்று தெரிய வருகிறது.

  • * *

"அலங்கார மேழைந்து என்பது தமிழ்விடு தூதுடையார் கூற்று.

மாறனலங்காரத்தில் அறுபத்துநான்கு அணிகள் கூறப்பட்டன. தொல்காப்பியத்தில் காணப்படும் இலக் கணங்கள் சிலவற்றை அலங்காரங்களாக்கியும், புதிய அணிகளைப் பெய்தும் அந்நூலாசிரியர் இலக்கணம் வகுத்தார். தண்டியலங்கார நூலாசிரியர் கூறியவற்றிற் கும் மாறன் அலங்காரத்தில் உள்ளவற்றிற்கும் வேறு பாடு மிகச் சிலவே ஆகும். மாறனலங்கார உரையாசிரி யர் அவ் வேறுபாடுகளை அங்கங்கே புலப்படுத்திச் செல் கின்ருர் குவலயானந்தம் நூறு அணிகளைக் கூறியது.

மேலே சொல்லப்பட்ட அணிகளுள் தன்மை என் பதை முதற்கண் வைத்தார், அது இயற்கையாதலின். வட நூலார் ஸ்வபாவோக்தி, வக்ரோக்தி யென அலங் காரங்களை இரு வகையாக்கித் தன்மையை முதல் வகை யிலும், ஏனையவற்றை இரண்டாவது வகையிலும் அடக் கிக் கூறுவர். இவற்றை இயல்பு, விகாரம் என்று கூறு வது தமிழ் வழக்கு தீவகத்தில் இடைநிலைத் தீவகம்,

1. கண்ணி, 28.